தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,015 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் 6.56 லட்சத்தைக் கடந்துள்ளது. புதிதாக5,015 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 6,56,385 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 39, அரசு மருத்துவமனைகளில் 26 என மொத்தம் 65 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,252ஆக அதிகரித்துள்ளது.
இன்று, 5,005 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 6,02,038 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். மருத்துவமனையில் 44,095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் இன்று 1,250 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 1,82,014 ஆக உள்ளது.
**-கவி**�,