தமிழகத்தில் புதிதாக 5,447 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று பாதிப்பு குறைந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 5,447 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 6,35,855ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5,524 பேர் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 5,80,736 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் 45,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று 67 பேர் உட்பட இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு 9,984 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் அதிகபட்சமாக இன்று 1,369 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு 1,76,779 ஆக உயர்ந்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாகக் கோவையில் இன்று 473 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
**கவி**�,