தமிழகத்தில் இன்று 5,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வெளி நாடுகள் மற்றும் மாநிலங்களிலிருந்து வந்த 5,986 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 61 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது. இதில், 53,283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று ஒரே நாளில் 5,742 பேர் நலம் பெற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,01,913 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒரே நாளில் 116 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 6,239 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் இன்று 1,175 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு, 1,21,450 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 462 பேருக்கும், சேலத்தில் 359 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**கவிபிரியா**�,