�
தமிழகத்தில் புதிதாக இன்று 5,956 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சவுதி அரேபியா, குவைத், தெலங்கானா, கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, டெல்லி ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் 5,956 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 4 லட்சத்து 28 ஆயிரத்து 41 ஆக அதிகரித்துள்ளது. இன்று 73 ஆயிரத்து 96 பேருக்கு உட்பட இதுவரை 46 லட்சத்து 52 ஆயிரத்து 867 பேருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று 6008 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 68 ஆயிரத்து 141 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
இன்று 91 பேர் உட்பட இதுவரை 7,322 பேர் தமிழகத்தில் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52 ஆயிரத்து 578 ஆக உள்ளது. சென்னையில் இன்று 1,150 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 597 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று கோவையில் 589 பேருக்கும், சேலத்தில் 496 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
** கவிபிரியா**�,