தமிழகத்தில் புதிதாக 5,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, ஜார்கண்ட், பீகார், கேரளா, ஒடிசா ஆகிய பகுதிகளிலிருந்து வந்தவர்கள் உட்படத் தமிழகம் முழுவதும் இன்று 5,835 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதனால் மொத்த பாதிப்பு 3 லட்சத்து 20 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது. இன்று 65 ஆயிரத்து 560பேருக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 5,146 பேர் உட்பட இதுவரை 2 லட்சத்து 61 ஆயிரத்து 459 பேர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இன்று 119 பேர் உட்பட இதுவரை 5,397 பேர் வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். சென்னையில் இன்று 989 பேருக்கு உட்பட இதுவரை ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 58 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையைத் தொடர்ந்து அதிகபட்சமாக இன்று செங்கல்பட்டில் 453 பேருக்கும், திருவள்ளூரில் 390 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 243 பேருக்கும், கோவையில் 289 பேருக்கும், தேனியில் 286 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
**-கவிபிரியா**�,