தமிழகத்தில் புதிதாக 5,688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக கொரோனா தொற்று கடந்த மார்ச் 7ஆம் தேதி காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவருக்குக் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து காட்டுத் தீயாய் பரவத் தொடங்கிய நிலையில், இன்று மொத்த பாதிப்பு 6 லட்சத்தை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி மொத்த பாதிப்பு 6,03,290 ஆக அதிகரித்துள்ளது.
இன்று 5,516 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,47,335ஆக உள்ளது. இன்று 66 பேர் உட்பட இதுவரை 9,586 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனையில், 46,369 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னையில் இன்று 1,289 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 1,68,689ஆக உள்ளது. கோவையில் இன்று 550 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
**-கவி**�,