T40 வருடங்களாகத் தொடரும் முயற்சி!

public

ஜப்பான் நாட்டினை சேர்ந்த Nintendo, கடந்த 40 ஆண்டுகளாக கேம் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாகத் திகழ்ந்து வருகிறது. அதன்படி அதன் பல்வேறு கேம்களும் பயனர்களின் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றவை. அதன்படி சூப்பர் மேரியோ போன்ற பல்வேறு கேம்களை தயாரித்துள்ள இந்நிறுவனத்தின் புதிய கேம் இன்று வெளியாகியுள்ளது.

பல்வேறு நிறுவனங்களும் அதிகளவு கிராபிக்ஸ் வசதிகொண்ட பல்வேறு கேம்களை வெளியிட்ட வண்ணமிருந்தாலும், கார்டூன் கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு வெளியாகி வந்த Nintendo நிறுவனத்தின் கேம்களுக்கு ஒரு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. காரணம் ஒரே விதமான கேம்களில் கிராபிக்ஸ் மாற்றம் மட்டும் செய்து வெளியிடும் நிறுவனங்களுக்கு இடையே, புதுமையான கேம்களை வெளியிடும் Nintendo நிறுவனம் தனித்துவம் வாய்ந்த ஒன்று தான். அதன்படி தற்போது வெளியாகியுள்ள Strong Arms என்ற கேம்மில் இதுவரை பயன்படுத்திய கதாபாத்திரங்கள் ஏதும் இல்லாமல் புதுமையானவற்றை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. மேலும் Nintendo நிறுவனம் வெளியிட்டுள்ள முதல் கேம் இதுவாகும். இந்த புதிய முயற்சியானது பலதரப்பு ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து 40 ஆண்டுகளாக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து வெற்றிபெறுவதே Nintendo நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என ars technica என்ற பிரபல இணையதளம் தனது கருத்துக் கணிப்பின் மூலம் தெரிவித்துள்ளது.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *