t4 தொகுதி இடைத்தேர்தல்: நடுவிரலில் அடையாள மை!

public

வரும் மே 19ஆம் தேதி நடைபெறும் 4 தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு நடுவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ.

வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி இடைத்தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம். வாக்குச்சாவடிகளுக்கு எந்திரங்களை அனுப்பும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ. அப்போது, வரும் 18ஆம் தேதியன்று வாக்காளர்களுக்கு ஒரு விரலில் மட்டுமே மை வைக்கப்படும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், வரும் மே 19ஆம் தேதியன்று ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலின்போது வாக்காளர்களுக்கு நடுவிரலில் அடையாள மை வைக்கப்படும் என்று கூறினார்.

“தமிழகத்தில் நடைபெற்ற வாகனச் சோதனையில் இதுவரை ரூ.130 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ரூ.280 கோடி மதிப்பிலான 991 கிலோ தங்கம், 661 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் நடத்திய சோதனையில் ரூ.34 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார் சத்யபிரதா சாஹூ.

தமிழகத்தில் உரிமம் பெற்ற 21,999 துப்பாக்கிகளில் 19,665 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டதாகத் தன் பேச்சில் அவர் குறிப்பிட்டார். வாக்குச் சாவடிகளை யாரும் கைப்பற்ற முடியாது என்றும் கூறினார். இன்று மாலையில் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகளுடன் காணொலியில் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *