கடந்த 2016ஆம் ஆண்டில், இந்தியாவில் 30 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகி உள்ளதாக ’கவுண்டர் பாய்ன்ட்’ ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இது 18 சதவிகிதம் உயர்வாகும்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ஸ்மார்ட்போன் விற்பனை 30 சதவிகிதம் சரிவடைந்ததாக ஒரு ஆய்வு நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இது 2016ஆம் ஆண்டின் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் விற்பனையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், கடந்த ஆண்டின் ஸ்மார்ட்போன் விற்பனை 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக கவுண்டர் பாய்ன்ட் ஆய்வு கூறுகிறது. இது தொடர்பாக கவுண்டர் பாய்ன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ‘இந்தியாவில் கடந்த ஆண்டின் ஸ்மார்ட்போன் விற்பனை 19 சதவிகித வளர்ச்சியுடன் 30 கோடியைத் தொட்டுள்ளது.
இதில் சீன பிராண்டுகள் விவோ, ஆப்போ, க்ஷியோமி மற்றும் லெனோவா போன்றவற்றின் பங்கு அதிகமாக உள்ளது. ஒட்டு மொத்த ஸ்மார்ட்போன் சந்தையின் முதல் ஐந்து இடங்களில் இந்திய பிராண்டுகள் எதுவும் இடம் பெறவில்லை. மொத்த சந்தையின் 45 சதவிகித பங்குகளை சீன நிறுவனங்களே ஆக்கிரமித்துள்ளன. மூன்றாம் (அக்டோபர் – டிசம்பர்) காலாண்டில் விற்பனையாகியுள்ள ஸ்மார்ட்போன்களில் மூன்றில் ஒரு பங்கு ஆன்லைன் மூலம் வாங்கப்பட்டுள்ளது. அந்தவகையில் கடந்த ஆண்டில் ஆன்லைன் வர்த்தகம் 24 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.�,