அரவக்குறிச்சியில் இன்று சட்ட மன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்த நிலையில், வாக்காளர்களுக்கு திமுகவினர் 2000 ரூபாய் டோக்கன் வழங்கியுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்ட மன்றத் தொகுதிகளுக்கு இன்று இறுதிகட்ட மக்களவைத் தேர்தலுடன் இணைந்து வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அரவக்குறிச்சியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்கான முயற்சிகளில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக செய்தியாளர்களிடம் கூறிய போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ”தொகுதி முழுவதும் இருக்கக்கூடிய வாக்காளர்களை, ஒவ்வொரு பகுதியிலும், திமுகவினர் அடைத்து வைத்துக்கொண்டு, 3 மணிக்கு மேல் 2,000 ரூபாய் தருகிறோம், வாங்கிக்கொண்டு அதன்பிறகு வாக்களிக்கச் செல்லுங்கள்” என்று அடைத்து வைத்ததாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் அரவக்குறிச்சியில் வாக்குப்பதிவு குறைந்துள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அவர், “திமுக ஒன்றிய பொருளாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஒருவர் 2,000 ரூபாய் தாள்களை ஜெராக்ஸ் எடுத்துவைத்திருந்தார். இதைக் கண்டுபிடித்ததும் அப்படியே தூக்கிப்போட்டு விட்டு ஓடிவிட்டார். வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, நொய்யல் பகுதிகளில் தமிழக முதல்வர் பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதனால் மக்கள் எல்லோரும் இப்பகுதியில் அதிமுகவுக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் அராஜக செயலில் திமுக வேட்பாளர் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்” என்றார்.
”திருக்காடுதுறை, முல்லை நகர், மலையடிவாரம், புகளூர், நான்கு ரோடு, காந்தி நகர், பேச்சிப்பாறை பகுதிகளில் வாக்காளர்களுக்கு 2,000 ரூபாய் தருவதாகக் கூறி அவர்களையெல்லாம் வாக்களிக்க விடாமல் அடைத்து வைத்துள்ளனர். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக உள்ளது. பணம் கொடுக்கப்படும் வாக்காளர்களுக்கு சில இடங்களில் நம்பர் போட்ட டோக்கன்களை கொடுத்துள்ளனர். காவல் துறையினரிடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டினார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
.
**
[அமமுகவின் க்ளைமாக்ஸ் வியூகம்- சமாளித்தாரா செந்தில்பாலாஜி?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/37)
**
.
**
[ஸ்டாலின் –மம்தாவுக்கு இடையே போட்டி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/38)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கமலின் நாக்கு- அமைச்சரை பாராட்டிய முதல்வர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/88)
**
.
**
[விமர்சனம்: மான்ஸ்டர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/19/14)
**
�,”