%
சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 13 இடங்களிலும், அதிமுக கூட்டணி 9 இடங்களிலும் முன்னிலை வகித்துவருகின்றன.
தமிழகத்தில் நடைபெற்ற 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 13 இடங்களிலும், அதிமுக 9 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது பற்றி தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஆம்பூர் தொகுதியில் திமுகவின் ஏ.சி.வில்வநாதன் 6,642 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார். குடியாத்தம் தொகுதியில் காத்தவராயன் 8,201 வாக்குகளுடனும், ஓட்டப்பிடாரம் தொகுதியில் சண்முகையா 5,139 வாக்குகளுடனும் முன்னிலை வகித்துவருகின்றனர்.
அதிமுக கூட்டணியைப் பொறுத்தவரை ஆண்டிப்பட்டியில் லோகிராஜன் 2,103 வாக்குகளுடனும், அரூரில் சம்பத்குமார் 4,500 வாக்குகளுடனும், ஒசூரில் ஜோதி 1,054 வாக்குகளுடனும், மானாமதுரையில் நாகராஜன் 1,411 வாக்குகளுடனும், நிலக்கோட்டையில் தேன்மொழி 1,732 வாக்குகளுடனும், பாப்பிரெட்டிப்பட்டியில் கோவிந்தசாமி 3,548 வாக்குகளுடனும் முன்னிலை வகித்துவருகின்றனர்.�,