Tவிஐபி 2ல் இணையும் மற்றொரு நடிகை!

public

வேலையில்லா பட்டதாரி 2 ன் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. தனுஷ் கதை மற்றும் வசனம் எழுத சௌந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்குகிறார். தனுஷ், அமலாபால், கஜோல் என பிரம்மாணட கூட்டணியோடு தயாராகிவரும் இந்த படத்தில் தற்போது ’வானவராயன் வல்லவராயன்’ மற்றும் ‘சிகரம் தொடு’ ஆகிய படங்களில் நடித்த மோனல் காஜரும் இணைந்துள்ளார். மேற்சொன்ன படங்களுக்கு பின் குஜராத்தி படங்களில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்த இவர் முதல் பாகத்தில் சுரபி நடித்த கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று தெரிகிறது. முதல் பாகத்தின் வெற்றி மற்றும் சௌந்தர்யா இயக்கம் ஆகியவை படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *