உத்தரப் பிரதேசத்திலுள்ள பல்கலைக்கழகமொன்று வழங்கிய பி.எட். தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டில், சம்பந்தப்பட்ட மாணவர் புகைப்படத்துக்குப் பதிலாக நடிகர் அமிதாப்பச்சனின் படம் இடம்பெற்றுள்ளது.
உத்திரப் பிரதேச மாநிலம் ஃபசாபாத் எனும் இடத்தில் இயங்கி வரும் டாக்டர் ராம் மனோகர் லோகியா ஆவத் பல்கலைகழகத்துக்கு உட்பட்டது ரவீந்திர சிங் ஸ்மாரக் மஹா வித்யாலயா கல்லூரி. இதில், அமித் எனும் மாணவர் பி.எட். படித்து வருகிறார்.
சமீபத்தில் அமித் படித்து வந்த கல்லூரியில், மாணவர்களுக்குப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தேர்வு நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டன. அமித்துக்கு வழங்கப்பட்ட நுழைவுச்சீட்டில், அவரது படத்துக்குப் பதிலாக அமிதாப்பச்சனின் படம் இடம்பெற்றிருந்தது.
இது குறித்து அக்கல்லூரியைச் சேர்ந்த அதிகாரிகள் பேசும்போது, “அமித் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பியபோது, இன்டெர்நெட் சென்டரில் ஏதாவது குளறுபடி நடந்திருக்கலாம் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதாவது தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த தவறு நிகழ்ந்திருக்கலாம்” என்று கூறினர்.
ஆனால், தான் சரியாக விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்ததாகத் தெரிவித்துள்ளார் அமித். தற்போது, அவரது தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் சான்றிதழ்களில் அமித்தின் உண்மையான படம் இடம்பெற, உரிய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாகக் கூறியுள்ளது அக்கல்லூரி நிர்வாகம்.
�,