இந்தியா முழுவதும் எங்கு திரும்பினாலும் ஐபிஎல் தொடரைப் பற்றி தான் பேச்சு. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் ரசிகர்களைக் கவரும் வகையில் OPPO நிறுவனம். தனது OPPO F7 டைமண்ட் பிளாக்(Diamond black) ஸ்மார்ட் ஃபோனில் கிரிக்கெட் லிமிடெட் எடிஷனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வகை ஃபோனை OPPO ஷோ ரூம்கள் மற்றும் ப்ளிப்கார்டில் (FLIPKART) மே மாதம் 14ஆம் தேதியில் இருந்து வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை அணியின் கேப்டனான ரோஹித் ஷர்மா, அந்த அணியைச் சேர்ந்த ஹர்திக் பாண்டியா மற்றும் கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியின் கேப்டனான அஸ்வின் ஆகிய வீரர்களை சமீபத்தில் OPPO நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக அறிவித்தனர். எனவே, அவர்களது கையெழுத்துக்களை தங்களது புதிய மாடலான OPPO F7 ஸ்மார்ட்ஃபோனின் பின்புறம் அச்சிட்டு விற்பனைக்கு வைத்திருக்கின்றனர்.
மூன்று வகையில் கிடைக்கவுள்ள OPPO F7 ஸ்மார்ட் ஃபோனில் பிராண்ட் அம்பாசிடாரான ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்டியா மற்றும் அஸ்வினின் கையொப்பத்தைத் தவிர மற்ற அம்சங்கள் அனைத்தும், பழைய மாடலான OPPO F7 டைமண்ட் ஸ்மார்ட் ஃபோனில் உள்ளது போலவே இருக்கும்.
OPPO F7 ஸ்மார்ட்போன் இந்த வருடம் மார்ச் மாதத்தில் அறிமுகமானது. இதில் 4GB RAM மற்றும் 64GB ஸ்டோரேஜ் மற்றும் 6GB RAM 128GB ஸ்டோரேஜ் வசதியும் கொண்ட இரண்டு வகையுள்ளது. இது 26,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
“இந்தியாவில் கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்காமல் மதமாகக் கருதுகிறார்கள். இந்தியாவில் கிரிக்கெட்டுக்கான அன்பு நிரந்தரமானது. இதையெல்லாம் யோசித்துத் தான் நாங்கள் இந்த புது மாடல் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளோம். கிரிக்கெட்டை விரும்பும் ஒவ்வொரு ரசிகர்களையும், இந்த ஸ்மார்ட்ஃபோன்கள் கவர்ந்துவிடும் என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும் எங்கள் பிராண்ட் அம்பாசிடரின் கையொப்பம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சமூகத்தில் தனி மரியாதையாக இருக்கும்” என்று OPPO இந்தியாவின் வர்த்தக இயக்குநரான வில் யாங் கூறினார்.
VIVO, MI நிறுவனங்களுடனான போட்டியில் OPPO ஸ்மார்ட்ஃபோன்களின் விற்பனை வேகம் குறைந்திருக்கிறது. அந்த வேகத்தை அதிகரிப்பதற்காக இதுபோன்ற கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துக்கொண்டிருப்பது தான் இந்த கவர்ச்சிக்குப் பின் இருக்கும் அரசியல்.
�,”