Tஷூட்டிங்கை முடித்த கழுகு 2 டீம்!

public

vகழுகு படத்தில் பாடல் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

படத்தின் பட்ஜெட் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் சரியான திட்டமிடல் இல்லாமல் படப்பிடிப்பு நாட்கள் அதிகமாவதே. அதிகரிக்கும் ஒவ்வொரு நாளுக்கும் பல லட்சங்களைத் தயாரிப்பாளர்கள் செலவழிக்க வேண்டி வரும். தமிழ் சினிமா முழுவதும் அரங்கில் படமாக்கப்பட்டபோது இயக்குநர்கள் படங்களை இருபதிலிருந்து முப்பது நாட்களில் முடித்துவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அரங்கத்தை விடுத்து வெளியிடங்களில் படப்பிடிப்பை நடத்தும்போது இயல்பாகப் படப்பிடிப்பு நாட்களின் எண்ணிக்கை அதிகரித்தது. விதிவிலக்காக ஒன்றிரண்டு படங்கள் இப்போதும் குறுகிய காலங்களில் எடுத்து முடிக்கப்படுகின்றன.

சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி இணைந்து நடித்துள்ள கழுகு 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி தொடங்கியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் மக்களுக்கு இடையூறு செய்யும் செந்நாய்களை வேட்டையாடும் கதாபாத்திரத்தில் கிருஷ்ணா நடித்துள்ளார். தற்போது படத்தின் அனைத்து வசனக் காட்சிகளின் படப்பிடிப்பையும் 28 நாட்களில் படக்குழுவினர் முடித்துள்ளனர். பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு மட்டும் இன்னும் படமாக்கப்பட உள்ளன. ஆகஸ்ட் மாதத்தின் இறுதி வாரத்தில் அதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, இந்தப் படத்தை திருப்பூர் பி.ஏ.கணேசன் தனது ஜி.கே. ஸ்டுடீயோஸ் மூலம் தயாரிக்கிறார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0