tலைக்குக்கு டோக்கன் சிஸ்டமா: அப்டேட் குமாரு

Published On:

| By Balaji

காலையில எந்திருச்சதுல இருந்து நைட்டு தூங்குற வரைக்கும் கையில போனை நோண்டிகிட்டே இருக்கேன்னு எங்க அம்மா ஒரே புலம்பல். இவன் என்ன உருப்படவா போறான்னு அர்ச்சனை வேற. நாட்டுல இருக்குற அத்தனை பேரையும் நாம இங்க கலாய்ச்சு தள்ளுறோம்.. நமக்கு ஒரு மரியாதை இருக்குதா வீட்டுல.. அப்டேட் குமாரு பிரச்சினை அப்டேட் குமாரா இருந்தா தான் தெரியும்.

ஆனா நம்ம கஷ்ட காலம், முடியப் போகுதுன்னு நினைக்குறேன். ஆமா வெட்டியா போனை நோண்டுறீங்களா நீங்க தான் அடுத்த எம்எல்ஏன்னு கூப்பிட்டு சீட்டு கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது நடக்குறது மத்திய பிரதேசத்துல. அங்க உள்ள காங்கிரஸ் கட்சியில எம்எல்ஏ சீட்டு வாங்கனும்னா 15,000 லைக் வாங்கனுமாம்.. 50,000 ஃபாலோவர்ஸ் இருக்கனுமாம்.

வழக்கமா இங்க ஒரு திட்டம் வந்து நாற்பது வருசம் கழிச்சி தான் மத்திய பிரதேசம், உத்திர பிரதேசம் பக்கம் போகும். இப்ப என்னடான்னா இந்த அசத்தல் திட்டம் அங்க இறங்கியிருக்கு. எது எப்படியோ இந்த பக்கம் எப்ப வருமுன்னு பார்த்துகிட்டு இருக்கேன். நம்ம தகுதிக்கு நான்லாம் பிரைம் மினிஸ்டரே ஆகிடுவேன், என்ன ஒண்ணு எவ்வளவு கோடி சம்பளம் வாங்குனாலும் உள் நாட்டுல வேலை பார்க்கனுங்குற கொள்கையோட இருக்கேன்.. சரி சரி சட்டுபுட்டுன்னு அப்டேட்டை படிச்சுட்டு, இந்த குமாருக்கு ஒரு ஆர்மி ஸ்டார்ட் பண்ணுங்க. ஆனா ஒண்ணு லைக் போடுறதுக்கு எல்லாம் டோக்கன் கேட்டு வரக்கூடாது ஆமா..

**@19SIVA25**

நான் ஆசைப்பட்டிருந்தால் 2001ம் ஆண்டே தமிழகத்தின் முதல்வராகி இருப்பேன்: டிடிவி தினகரன்

ஜப்பான்ல ஜாக்கிஷான் கூப்பிடாக மொமன்ட்

**@Kozhiyaar**

ஹெல்மெட் மாட்டினா உயிரை காப்பாற்றும் என்பது மறுக்க முடியாது!!

ஆனால் அந்த ஹெல்மெட்டை காப்பாற்ற நாங்க படுற பாடு இருக்கே!!

வணடில மாட்டிட்டு போன ஹெல்மெட்டை காணோம்யா!!!

**@BlackLightOfl**

“அப்படி இந்த திங்கட்கிழமையில் என்ன தான் இருக்கு” என்று எண்ணிக்கொண்டே போர்வை சரி செய்து மீண்டும் தூங்கினான், அந்த வேலையில்லா பட்டதாரி..

**@Kozhiyaar**

கிக் ஸ்டார்ட் பைக்கிலிருந்து இருந்து செல்ஃப் ஸ்டார்ட் ஸ்கூட்டருக்கு மாறுவது, வயது ஏறுவதற்கான குறியீடுகளில் ஒன்று!!

**@rahimgazali**

கண் திருஷ்டி காரணமாக

முக்கொம்பு அணை உடைஞ்சிருச்சு!

– அமைச்சர் உதயகுமார்

இப்படி எல்லோரும் அறிவா பேசிட்டு இருக்காதீங்க. அப்புறம், அமைச்சர்கள் எல்லாம் இவ்வளவு அறிவாளியான்னு ஆட்சிக்கும் கண் திருஷ்டி பட்டுடப்போகுது?!

**@BlackLightOfl**

காசு இல்லைன்னு வேலை தேடி போனா “காசு தா வேலை தரேன்”னு சொல்றாங்க..

படித்த பட்டதாரியின் வேதனை

**@Thaadikkaran**

கண் திருஷ்டி காரணமாக

முக்கொம்பு அணை உடைஞ்சதுக்கு திருஷ்டி சுத்தி போட பட்ஜெட்ல நிவாரண தொகை ஒதுக்குவாங்கன்னு நினைக்கேன்..!

**@kayal_twitz**

இந்து மதத்தை மீட்டெடுக்க கடவுளால் அனுப்பப்பட்ட தூதர் எச்.ராஜா – நடிகர் விசு

அப்படியே சிலையை மீட்டெடுக்க யாரயாவது அனுப்ப கூடாதா ? – மக்கள்

**@amuduarattai**

செய்தி: சர்வதேச பொருளாதார சூழலுக்கு மத்தியில் 8.2 சதவீத வளர்ச்சி இந்தியாவுக்கு மட்டுமே சாத்தியம்.- அருண் ஜெட்லி.

கருத்து: பெட்ரோல் விலை ரூ 82 ஐ தாண்டியதை தான் 8.2 சதவீதம் வளர்ச்சின்னு சொல்றாரோ.?!

**@amuduarattai**

செய்தி: அஞ்சலக வங்கி சேவையை தொடங்கினார் பிரதமர் மோடி.

பஞ்ச்: விஜய் மல்லையா, அஞ்சலகத்தில் கடன் பெறுவதற்காக விண்ணப்பித்தார்.

**@yugarajesh2**

எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விட்டது இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்-டி.ஆர்# தீபா..மாதவன்..அழகிரிகளே சற்று ஓய்வெடுங்கள்

அவன் வந்து விட்டான்..அவன் வந்து விட்டான்….!!!

**@Tamil Suresh**

செப்டம்பர் 5ந்தேதி அண்ணாசாலையில் தன் நண்பர்கள் சிலருடன் வாக்கிங் போகவிருக்கும் அழகிரி போக்குவரத்துக்கு இடைஞ்சல் இல்லாமல்

பிளாட்பாரத்தில் நடந்துபோகவேண்டும் என்று நண்பர்களிடம் சொல்லி இருக்கிறார்.

**@ajmalnks**

எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விட்டது இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன்-டி.ஆர்

தமிழ்நாட்டுக்கு ஒரு நிரந்தர முதல்வர் கிடைச்சிட்டாருய்யா…

**@kumarfaculty**

டூவீலரின் பின்னால் உட்கார்ந்திருக்கும் மனைவி போட்டிருக்கும் ஹெல்மெட் தலைக்கவசமாக மட்டுமல்ல.. வாய்ப்பூட்டும் கூட…!!!

**@kathir_twits**

ரேஷன் கார்டின் கிழிந்த பக்கங்களை ஸ்மார்ட் கார்ட் மாற்றியது. ஆனால் அரிசியின் துர்நாற்றம் மட்டும் மாறவேயில்லை !!

**Seyon Mayon**

“ஆ காட்டு, கண்ணுக்கு மருந்து ஊத்தறேன்”

“பாப்பா.. வாய்ல எதாவது ஊத்தனாதான் ‘ஆ காட்டு’னு சொல்லணும். கண்ணுக்குச் சொல்லக் கூடாது”

“ஏங்?”

“வாய்தான் ‘ஆ’னு பேசும். கண்ணு எங்கையாவது பேசுமா?”

“கண்ணுக்கு ஊத்தறப்பா என்னா சொல்லி ஊத்தனும்”

“நீ எதையும் சொல்லாத.. மருந்த மட்டும் ஊத்து. கண்ணு பாக்கும் அவ்வளவுதான்..”

“சரி, ‘ஆ பாரு’.. கண்ணுக்கு மருந்து ஊத்தறன்”

**@கருப்பு கருணா**

ஆதவன் தீட்சன்யா கொஞ்சநாட்களுக்கு முன்பு ” நாட்டிலொரு நாடகம் நடக்குது ” என்றொரு கதையை எழுதினார்.அதில் ஒருவர் தான் போராட்டம் நடத்துவதற்கு சுடுகாட்டில் இடம் அளிக்கவேண்டுமென போலிசிடம் அனுமதி கேட்பார். ஏன் சுடுகாட்டில் இடம் கேட்கிறாய் என இன்ஸ்பெக்டர் கேட்பார். நாங்க எங்கே கேட்டாலும் நீங்க ஆளே இல்லாத சுடுகாடு போன்ற ஒதுக்குப்புறமான இடத்தில்தான் அனுமதி கொடுப்பீங்க. நீங்களே சுடுகாட்டை ஒதுக்குவதற்குப்பதில் நாங்களே சுடுகாட்டில் இடம் கேட்டோம் என்பார் அந்த மனுதாரர். போலீசுக்கு ரோசம் பொத்துக்கிட்டு வந்துவிடும்.அப்படி சுடுகாட்டில் ஒதுக்குவதாக இருந்தால்கூட அதை நாங்கதான் சொல்வோம்.. நீங்களே கேட்கக்கூடாது என்று சொல்லிவிட்டு சரி போய் சுடுகாட்டில் போராட்டம் நடத்திக்கோங்க என பெரியமனது வைத்து அனுமதி தருவார்.

இதுபோன்ற காலம் மிகவும் சமீபித்திருக்கிறது. பெட்டிஷன்களை தயார் செய்துகொள்ளுங்கள்.

-லாக் ஆஃப்�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share