tரவி சாஸ்திரியைக் கவர்ந்த இரண்டு போட்டிகள்!

Published On:

| By Balaji

நடந்து முடிந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான தொடர் குறித்துக் கருத்து தெரிவித்துள்ளார் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.

இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரை நேற்று நடந்த இறுதிப் போட்டியில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் எளிதாக வென்றதன் வாயிலாகக் கைப்பற்றியது இந்திய அணி. இதன் வாயிலாக உள்ளூரில் தொடர்ந்து 6ஆவது முறையாகத் தொடரைக் கைப்பற்றி சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிலையில் இத்தொடரில் வென்றது குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ரவி சாஸ்திரி போட்டி முடிந்த நிலையில் தனது கருத்தைத் தெரிவித்தார். அப்போது,“இந்தத் தொடரில் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டனர். குறிப்பாகக் கூறுவதென்றால் கடைசி இரண்டு போட்டிகளில் மிகவும் அபாரமாக விளையாடினர்.

இதனால்தான் கடைசி இரண்டு போட்டியிலும் இந்திய அணிக்கு பெரிய அளவுக்கு வெற்றி கிடைத்தது. நீண்ட இடைவேளைக்கு பிறகு அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ள அம்பத்தி ராயுடு மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருவது அணிக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது” என்றார்.

ரோஹித் ஷர்மா நான்காவது போட்டியில் அபாரமாக பேட்டிங் செய்து 162 ரன்களைக் குவித்தாலும் அம்பதி ராயுடு அடித்த சதமும் அந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு உதவிகரமாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏதேனும் ஒரு தொடரில் இந்தியா தோல்வியடைந்தால் இந்திய அணி வீரர்களின் அளவுக்கு விமர்சனத்திற்கு உள்ளாபவர்கள் இந்திய அணியின் பயிற்சியாளர்கள். இந்தத் தொடரில் இந்தியா வென்றுள்ளதால் விமர்சனத்திலிருந்து தப்பியுள்ளார் ரவி சாஸ்திரி.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share