இரண்டாவது முறையாகப் பிரதமராகப் பொறுப்பேற்ற பிரதமர் மோடி இன்று இலங்கை சென்றார். அங்கு மழை பெய்ததால் மோடிக்கு குடை பிடித்து அதிபர் சிறிசேனா அழைத்து சென்றுள்ளார்.
பிரதமர் மோடி இரு நாள் சுற்று பயணமாக மாலத்தீவு மற்றும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். நேற்று மாலத்தீவு சென்ற நிலையில் அங்கு இரு நாட்டுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த நிலையில் இன்று (ஜூன் 9) இலங்கை சென்றார். அவரை இலங்கை பிரதமர் ரணில் விக்ரம சிங்கே வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்டா் பண்டிகை தினத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலால் உருக்குலைந்த கொழும்பு அந்தோணியார் தேவாலயத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்து அதிபர் மாளிகைக்குச் சென்ற அவர் சில வகை செடிகளை நட்டு வைத்தார். அவருடன் அதிபர் சிறிசேனா உட்பட உயர் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
இலங்கையில் பேசிய பிரதமர் மோடி, ”தீவிரவாதம் இலங்கையின் உத்வேகத்தைச் சிதைத்துவிட முடியாது. இலங்கை மீண்டெழும் என்ற நம்பிக்கை உள்ளது. இலங்கைக்கு எப்போதும் இந்தியா உறுதுணையாக இருக்கும்” என்று பேசியுள்ளார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து மோடி ட்வீட் செய்துள்ளதாவது, பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் பயனுள்ள விவாதங்கள் நடத்தப்பட்டது. இலங்கையின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்கு இந்தியா தனது முழு ஆதரவை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அதிபர் மாளிகைக்குள் பிரதமர் நரேந்திர மோடி செல்லும்போது மழைத்துளி விழ, இலங்கை அதிபர் சிறிசேனா தன்னுடைய கையில் இருந்த குடையில் மோடியையும் அரவணைத்து அழைத்துச் சென்றார். அந்தப் படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள சிறிசேன, “இலங்கைக்கு வருகை தந்ததற்கு நன்றி. நீங்கள் எங்கள் உண்மையான நண்பன் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இலங்கைக்கான உங்களது ஆதரவையும், ஒத்துழைப்பைம் நான் மிகவும் பாராட்டுகிறேன், அது தொடரவும் வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மோடி- சிறிசேன சந்தித்த படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ள இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், “மழை வந்தாலும், வெயில் அடித்தாலும் நாங்கள் உங்களோடு இணைந்து நிற்போம்” என்று பதிவிட்டுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**
[பன்னீருக்கு எதிராக வைத்தியின் ஆட்டம் ஆரம்பம்!](https://minnambalam.com/k/2019/06/09/40)
**
**
[ஆந்திர அமைச்சரவைப் பதவியேற்பு: ரோஜாவுக்கு இடமில்லை!](https://minnambalam.com/k/2019/06/09/22)
**
**
[டிஜிட்டல் திண்ணை: பன்னீருக்கு எதிராக எடப்பாடியின் வெளிப்படையான குரல்!](https://minnambalam.com/k/2019/06/08/73)
**
**
[செக்ஸுக்கு பிறகு சக்தியாய் உணரும் இந்தியப் பெண்கள்!](https://minnambalam.com/k/2019/06/09/36)
**
**
[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)
**
�,”