Tமத்திய அரசின் சதி : விஜயபாஸ்கர்

Published On:

| By Balaji

மத்திய அரசு உள்நோக்கத்துடன் தன்னுடைய வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை ஏப்ரல் 7ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு ஆரம்பித்து, ஏப்ரல் 8ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு முடிவடைந்துள்ளது.

கிட்டத்தட்ட 24மணிநேரம் நடைபெற்ற சோதனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், ‘என் வீட்டிலிருந்து பணமோ, எந்தவித ஆவணமோ கைப்பற்றப்படவில்லை. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கருத்தில்கொண்டு மத்திய அரசு உள்நோக்கத்துடன் செய்த சதிதான் இது. சீப்பை ஒளித்துவைத்துவிட்டால் கல்யாணம் நின்றுவிடாது’ என்று தெரிவித்தார்.

‘இவ்வளவு நேரம் வருமான வரி அதிகாரிகள் என்ன செய்தார்கள்?’ என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, ‘ஜாலியாகப் பேசிக்கொண்டிருந்தோம்’ என்று சிரிப்புடன் பதில் அளித்தார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share