tமதிப்பெண் பட்டியலை வெளியிட்ட மின் வாரியம்!

public

�தமிழ்நாடு மின் வாரியத்தில், 50 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளன. சராசரியாக, மாதம்தோறும் 300க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வுபெறுவதால், மின் ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து வருகிறது. இதனால், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர், உதவி வரைவாளர் உள்ளிட்ட 2,175 பணியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு ஜுன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வில் பங்கேற்றவர்கள், தனியாகப் பார்க்கும்வகையில் மதிப்பெண் விபரத்தை மின் வாரியம், சில மாதங்களுக்குமுன் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது, எழுத்துத் தேர்வில் பங்கேற்ற அனைவரும் பெற்ற மதிப்பெண்களின் முழு விபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரி ஒருவர், ‘10 பதவிகளுக்கான 2,175 பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு அண்ணா பல்கலை மூலம் எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் பங்கேற்ற அனைவரின் மதிப்பெண் விபரமும் வெளியிடப்பட்டது. அதன்படி, ‘கட் – ஆப்’ மதிப்பெண் நிர்ணயித்து விரைவில் வெளியிடப்படும். பின்னர் நேர்காணல் நடத்தப்பட்டு, அதிக மதிப்பெண் எடுப்பவர்கள் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்’ என தெரிவித்துள்ளார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.