மகளிர் காவல் நிலையத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது 22 சதவிகிதம் அதிகரித்துள்ளது என ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. இந்த எண்ணிக்கையானது, இந்தியா மிகவும் அபாயகரமான நாடாக வெளிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பெண்கள் அங்கு சென்று புகார் தெரிவிப்பதை வசதியாகக் கருதுகின்றனர்.
இங்கிலாந்திலுள்ள எஸ்ஸெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சோபியா அமரால், சோனியா பாலோத்ரா, கனெக்டிகட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நிஷித் பிரகாஷ் ஆகியோர் இது குறித்த ஆய்வொன்றை நடத்தினர். கடந்த ஜூன் மாதம் வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், ஒவ்வொரு நகரத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 21.4 சதவிகித வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மாநிலங்கள் அளவில் 22.5 சதவிகித வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவில், ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார். இவ்வாறு புகார் அளிக்கும்போது அவர்களுக்கு அவநம்பிக்கை அளிப்பது அல்லது துன்புறுத்துவது போன்றவை நடந்துவருகின்றன என்பதும் உண்மையே.
பெண் கடத்தப்படுதல் 22.2 சதவிகிதமும், பெண்களுக்கு எதிரான வீட்டு வன்முறைகள் 21.7 சதவிகிதமும் பதிவு செய்யப்பட்டுள்ளன.1973ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் மகளிர் காவல் நிலையம் கேரளாவின் கடற்கரை நகரமான கோழிக்கோட்டில், அப்போதை பிரதமர் இந்திரா காந்தியால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது, இந்தியாவில் மகளிர் காவல் நிலையங்களின் எண்ணிக்கை 479ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 196 காவல் நிலையங்கள் உள்ளன. இங்கு பெண் காவலர்களின் எண்ணிக்கை 5.87 சதவிகிதமாக உள்ளது. 2015-2016ஆம் ஆண்டில் பெண் காவலர்களின் எண்ணிக்கை 15 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதாவது, 1,23,000இலிருந்து 1,40,000ஆக உயர்ந்துள்ளது என்று இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.�,