சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகும் வாழ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக அறிவித்துள்ளது படக்குழு.
கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படங்களின் வரவேற்பைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிக்கும் மூன்றாவது படம் வாழ். அருவி என்ற தன் முதல் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கும் இந்தப் படம் பற்றிய தகவல்கள் சமீபத்தில்தான் வெளியாகின. அதற்குள் படப்பிடிப்பை நிறைவு செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது வாழ் படக்குழு.
நூறு லோகேஷன்களுக்கு மேல் படப்பிடிப்பை நடத்தியுள்ள படக்குழு 75 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்திருக்கிறது. இத்தகவலை சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்திருக்கிறது. மேலும், இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக அறிவித்திருக்கிறது படக்குழு.
இந்தப் படத்துக்கு பிரதீப் விஜய் இசையமைக்கிறார். அருவி படத்திற்கு ஒளிப்பதிவு செய்த ஷெல்லி கேலிஸ்ட்டும், படத்தொகுப்பு செய்த ரேய்மண்ட் டெரிக் கிரஸ்டா ஆகியோர் இந்தப் படத்திலும் பணியாற்றுகின்றனர்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”