Tபூனம் பாஜ்வா, நீ நல்லா வரணும்மா!

public

இயக்குநர் சுந்தர்.சி-யிடம் பல படங்களில் இணை இயக்குநராகவும், வசனகர்த்தாவாகவும் பணியாற்றிய வெங்கட் ராகவன் ‘முத்தின கத்திரிக்கா’ படத்தை இயக்கியுள்ளார். இதில், சுந்தர்.சி கதாநாயகனாக நடிக்க, பூனம் பஜ்வா, சதீஷ் போன்றோரும் நடித்துள்ளார்கள். ‘வெள்ளிமூங்கா’ என்ற மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக் இது.

அண்மையில் நடந்த இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, “ஒருநாள் டி.வி.யில் ‘வெள்ளி மூங்கன்’ என்ற மலையாளப் படத்தை பார்த்துக் கொண்டிருந்தேன். படம் மிகவும் ரசனையாகச் சென்றது. சிரிப்பை அடக்க முடியவில்லை. எனவே, இந்தப் படத்தை ‘ரீமேக்’ செய்யலாம் என்று முடிவுசெய்தேன். 40 வயது ஆனபிறகும் திருமணம் செய்துகொள்ளாத அரசியல்வாதி பற்றிய கதை என்பதால், ஹீரோக்கள் யாரும் ஒத்துக் கொள்ளவில்லை. எனவே படத்தில் நானே நடித்தேன். கடந்த பல ஆண்டுகளாக எனக்கு வலதுகரமாக செயல்பட்ட திறமைசாலியான வெங்கட்ராகவனை இயக்குநராக்க நினைத்தேன். ஆனால், முதலில் இதற்கு அவர் தயாராக இல்லை. அவர் அடுத்த கட்டத்துக்குப் போகவேண்டும் என்பதால் அவரை வற்புறுத்தி இந்தப் படத்தை இயக்கவைத்தேன். படமும் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது” என்று கூறியுள்ளார். இந்த செய்திக்கு பின்னாடி ஒரு சங்கதியும் இருக்கிறது. சுந்தர்.சி-யின் அரண்மனை 2 திரைப்படத்தில் நடித்த பூனம் பாஜ்வாவுக்கு, அந்த திரைப்படத்தில் நல்ல பெயர் கிடைக்கும் என வாக்குறுதி கொடுத்திருந்தார் சுந்தர்.சி. ஆனால் ஹன்ஸிகா த்ரிஷா என டாப்மோஸ்ட் நடிகைகளின் பிரகாசத்தால், பூனம் பாஜ்வா என்ற புதிய நட்சத்திரத்தால் பளபளக்க முடியவில்லை. எனவே இந்த படத்தில் எப்படியும் இந்த பெண்ணிற்கு கைமாறு செய்துவிடவேண்டும் என்று பூனம் பாஜ்வாவை கமிட் செய்திருப்பதாக கூறியிருக்கிறார்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *