டேனியல் கிரேக் நடிக்கும் பாண்ட் 25 படத்தில் கேப்டன் மார்வெலில் நடித்த லஷானா லின்ச் இணைந்துள்ளார்.
2015 ஆம் ஆண்டில் வெளியான ஸ்பெக்டர் திரைப்படத்திற்கு பின் ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25ஆவது படமாக ‘பாண்ட் 25’ என தற்காலிகமாக தலைப்பிடப்பட்டிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. தொடர்ந்து நான்கு முறை ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்த டேனியல் கிரெய்க், இந்த முறையும் பாண்டாக புலனாய்வை தொடங்கவுள்ளார். இப்படத்துடன் இவர் பாண்ட் கதாபாத்திரத்தில் நடிப்பது முடிவடையவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
ஜமைக்காவில் நடைபெற்று வரும் பாண்ட் 25 படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட முதல் பார்வை வீடியோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரலானது. ஜமைக்காவைத் தொடர்ந்து லண்டன், நார்வே, இத்தாலி போன்ற நாடுகளில் படமாக்கப்பட உள்ளது பாண்ட் 25. 2018ஆம் ஆண்டின் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை பொஹிமியன் ரேப்ஹொட்ஸி படத்திற்காக பெற்ற ரமி மாலிக் வில்லனாக நடிக்கிறார். மேலும் ரேல்ஃப் பியன்னஸ், நவோமி ஹாரிஸ் என முக்கியமான ஹாலிவுட் நட்சத்திரங்கள் பங்களிக்கின்றனர்.
இந்த நிலையில், கேப்டன் மார்வெல் படத்தில் பைலட்டாகவும் பிரதான கதாபாத்திரமான கேப்டன் மார்வெலென் தோழியாகவும் நடித்த லாஷ்லியா லின்ச் பாண்ட் 25 படத்தில் இணைந்துள்ளார். தனது பணியின் மீது விருப்பமில்லாத பாண்ட் ஓய்வு பெறுகிறார். ஆனால், தீர்க்கமுடியாத சிக்கலொன்றை முடிக்க பாண்டை மீண்டும் பணிக்கு அழைப்பது போல தொடங்கும் இப்படத்தில் பாண்டின் உதவியாளராக லாஷ்லியா லின்ச் நடிக்கவுள்ளார்.
**
மேலும் படிக்க
**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ வேலுமணியா இப்படி? – எடப்பாடி ஆதங்கம்!](https://minnambalam.com/k/2019/07/14/27)**
**[எம்.எல்.ஏ புகார்: அமைச்சரை எச்சரித்த எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/14/46)**
�,”