tபத்ம விருதுகள்: தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்!

Published On:

| By Balaji

இந்தியா முழுவதும் 141 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், பொறியியல், தொழில்- வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ ஆகிய உயரிய விருதுகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

முன்னாள் மத்திய அமைச்சர்கள் ஜார்ஜ் பெர்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ், உடுப்பி பெஜாவர் மடாதிபதி, குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் உள்ளிட்ட 7 பேருக்கு பத்மவிபூஷன் விருதுகளும்,கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர், பாட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளிட்ட 16 பேருக்கு பத்மபூஷன் விருதுகளும், 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்படவுள்ளன. இந்த பட்டியலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்களும் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வேணு சீனிவாசனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மூன்றாவது பெரிய இரண்டு சக்கர உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

சமூக சேவையில் சிறந்து பணியாற்றியதற்காக திண்டுக்கல்லைச் சேர்ந்த கிருஷ்ணாம்மாள் ஜெகநாதனுக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் கிடைப்பதற்காக போராடி வருகிறார்.

அதுபோலவே சமூகசேவைப் பிரிவில் தென்காசி மாவட்டம், ஆய்க்குடி அமா்சேவா சங்க நிறுவன தலைவா் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளியான இவர், கடந்த 1981ஆம் ஆண்டு இந்த சங்கத்தை தொடங்கி, கடந்த 38 ஆண்டுகளாக பல்வேறு மறுவாழ்வுப் பணிகள் மூலம் மாற்றுத்திறனாளிகள் இந்த சமுதாயத்துடன் ஒருங்கிணைந்து வாழ பணியாற்றி வருகிறார். பாம்பே சகோதரிகள் என்று அழைக்கப்படும் கர்நாடக இசைக் கலைஞர்கள் லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம் ஆகியோருக்கு கூட்டாக பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கலைப் பிரிவில் சிறப்பாக செயல்பட்டதற்காக ஓவியர் மனோகர் தேவதாஸுருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதுபோலவே, நாதஸ்வர இசைக் கலைஞர்கள் காலீஷாபி மெஹபூப், ஷேக் மெகபூப் சுபானி சென்னை ஐஐடி விரிவுரையாளர் பிரதீப் தலப்பில் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதுகள் பெறவுள்ளனர். இலக்கியம் மற்றும் கல்வித்துறையில் பத்மபூஷன் விருது புதுச்சேரியைச் சேர்ந்த மனோஜ் தாஸ்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share