tநெல்லையில் என்.ஐ.ஏ சோதனை: ஆவணங்கள் பறிமுதல்!

public

நெல்லையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் நடத்திய சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள் மற்றும் சில முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. தேசிய புலனாய்வு முகமை அமைப்பும் ஆங்காங்கே சோதனைகளை நடத்தி வந்தன. சில தினங்களுக்கு முன்பு கோவையில் ஐந்து இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 21) தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

வெள்ளாங்குளியைச் சேர்ந்த திவான் முஜ்பூர், புளியங்குடி சுப்பிரமணிய சுவாமி கோயில் சந்நிதி தெற்கு தெருவைச் சேர்ந்த மைதீன் இருவரும் வளைகுடா நாடுகளில் வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு மைதீன் புளியங்குடிக்கு வந்து பெயின்ட் கடை வைத்து நடத்தி வருகிறார். அது போன்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து திவான் முஜ்பூரும் வெள்ளாங்குளிக்கு வந்துள்ளார். புளியங்குடியில் உள்ள மைதீனுக்கு சொந்தமான வீட்டில் தங்கி அவருடைய பெயின்ட் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் திவான் முஜ்பூருக்குத் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாகக் கொச்சி என்.ஐ.ஏ அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் நேற்று காலை அவரது வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர். அதிகாரி விஜயகுமார் தலைமையில் இரு குழுக்களாகப் பிரிந்து அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருக்கின்றனர். சுமார் ஆறு மணி நேரம் இந்த சோதனை நடைபெற்றிருக்கிறது. இதுபோன்று மைதீனிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

திவான் முஜ்பூரின் பாஸ்போர்ட், மூன்று செல்போன்கள், ஒரு சிம்கார்டு மற்றும் சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து இன்று (செப்டம்பர் 22) கொச்சியில் உள்ள தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தில் நேரில் வந்து ஆஜராகுமாறு திவான் முஜ்பூருக்கு உத்தரவிட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0