Tநமீதாவை கலாய்க்கும் ரசிகர்கள்!

Published On:

| By Balaji

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவின் மார்க்கெட் அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் தமிழ் மக்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துவிட்டார். இது நூறு படங்கள் நடித்தாலும் அமையாத வாய்ப்பு. அதே நேரத்தில் பல பிரபலங்கள் பற்றி ரசிகர்களுக்கு இருந்த நேர்மறையான அபிப்ராயத்தை சற்று அசைத்துப் பார்க்கவும் செய்துள்ளது இந்த நிகழ்ச்சி. ஓவியாவை புகழ்ந்து சமூகவலைதளங்களில் எழுதப்படுவது தவறில்லை. ஆனால் மற்ற போட்டியாளர்களை தரம் தாழ்ந்து விமர்சிப்பது ஏற்றுக்கொள்ளமுடியாத அணுகுமுறை. அதை சமீபத்திய நமீதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்க்கும் போது அறியலாம்.

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பின்னர் இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார் நமீதா. அங்கு தான் சுற்றிப்பார்க்கும் இடங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு பலரும் லைக்ஸ் அளித்து வந்தாலும் சிலர் நமீதாவை ஆரோக்கியமற்ற முறையில் விமர்சித்து வருகின்றனர். நிகழ்ச்சியின் போது கழிவறையை எப்படி சுத்தம் செய்வது என்பது பற்றி நமீதா மற்ற சக போட்டியாளர்களுக்கு விளக்குவார். அதையும் மிகைப்படுத்தி விமர்சிக்கின்றனர். அங்கேயே இருந்துவிடுங்கள் தமிழகம் வர வேண்டாம் என்பதாகவும் விமர்சனங்கள் வந்துள்ளன. சமூக வலைதளங்கள் உலகில் அனைவருடனும் எளிதில் உரையாட, கருத்துக்களை பகிர ஒரு பெரிய வெளியை உருவாக்கி கொடுத்துள்ளது. ஆனால் இது போன்ற தரம் தாழ்ந்த விமர்சனங்கள் அந்த வெளியை களங்கப்படுத்திக்கொண்டுள்ளன.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel