நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் நான்கு மாதங்களில் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.
இதுகுறித்து நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உலகின் முக்கிய சந்தைகளில் நகைகள் மற்றும் ரத்தினங்களுக்கான தேவை குறைந்ததால் இந்த நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான முதல் 4 மாதங்களில் ஏற்றுமதி குறைந்துள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் 5 விழுக்காடு குறைவாக 10.64 பில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் மற்றும் ரத்தினங்கள் மட்டுமே ஏப்ரல் முதல் ஜூலை வரையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் – ஜூலையில் 11.2 பில்லியன் டாலர் மதிப்பிலான நகைகள் மற்றும் ரத்தினங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதில் குறிப்பாக வெள்ளி நகைகள் ஏற்றுமதிதான் மிகவும் சரிவைச் சந்தித்தது. இக்காலகட்டத்தில் வெள்ளி, 90 விழுக்காடு சரிந்து 172 மில்லியன் டாலருக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துக்குப் பிறகு தங்க நகைகள் ஏற்றுமதி மீண்டும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வரவிருப்பதால் உள்நாட்டிலும் தங்க நகைகளுக்கான தேவை வலுவாக அதிகரிக்கும்’ என்று கூறப்பட்டுள்ளது.�,