Tதொண்டர்களுக்கு அதிமுக அறிவுரை!

Published On:

| By Balaji

வாக்கு எண்ணிக்கையின்போது எவ்வாறு செயல்பட வேண்டும் என்று அதிமுக முகவர்களுக்கு பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர்.

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகவுள்ளன. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து அரசியல் கட்சிகள், தங்களது முகவர்களுக்கு அறிவுறுத்திவருகின்றன. திமுகவின் வெற்றியை அபகரிக்க மத்திய, மாநில அரசுகள் திட்டம் வகுத்திருக்கும் தகவல் வந்திருப்பதாக குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், அனைத்து தொகுதிகளிலும் கவனமாக செயல்படுமாறு முகவர்களுக்கு வலியுறுத்தியுள்ளார். ஆனால் வாக்கு எண்ணிக்கையின்போது திமுகவினர் தில்லுமுல்லுவில் ஈடுபடலாம் என்று அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

இதுதொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (மே 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாக்கு எண்ணிக்கையன்று முகவர்கள் அனைவரும் மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும். அங்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து, “வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், திமுகவினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களைச் சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும் என்றும் இருவரும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்கள்.

.

.

**

மேலும் படிக்க

**

.

. **

[வளர்மதியிடம் சீறிய எடப்பாடி](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/27)

**

.

.

**

[எக்சிட் போல்: பிரபல ஊடகங்களின் சறுக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/56)

**

.

**

[தெற்கில் பாஜகவைப் பின்னுக்குத் தள்ளுமா காங்கிரஸ்?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/21/32)

**

.

**

[சோனியா திடீர் உற்சாகம்: காரணம் என்ன?](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/16)

**

.

**

[டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலினுக்கு அமித் ஷா தூது!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/20/82)

**

.

.

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share