tதேவர் ஜெயந்தி 144 தடை : ஆட்சியருக்கு நோட்டீஸ்!

public

தேவர் ஜெயந்திக்காக விதிக்கப்படும் 144 தடையை நீக்கக் கோரிய வழக்கில் ராமநாதபுர ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தேவர் ஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் இந்திய விடுதலை வீரரும் அரசியல்வாதியுமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாளான அக்டோபர் 30ஆம் தேதி் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பொது விடுமுறை இல்லை என்றாலும் சில பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கும், கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும். 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படும்.

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த சீர்மரபினர் நல கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாரிமுத்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடர்ந்த வழக்கில்,” தேவர் ஜெயந்தி விழாவைத் தடுக்கும் நோக்கில், வாடகை வாகனங்களில் செல்லக்கூடாது, சொந்த வாகனமாய் இருந்தாலும் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளுடன், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்படுவதாக” தெரிவித்திருந்தார்.

ஒரு சிலர் செய்யும் தவறுகளை தடுக்கும் வகையில் எடுக்கும் நடவடிக்கையால் அனைவரும் பாதிப்புக்குள்ளாவது சரியானதல்ல. எனவே 144 தடையை ரத்து செய்ய கோரி ராமநாதபுர ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த மனு நேற்று (அக் 4) நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது , இதுகுறித்து அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ராமநாதபுர ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். .�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0