Tதெறி பேபி கோலி பற்றி 6 பார்வைகள்

public

சச்சின் காலத்தில கோலி இருந்தா சச்சினுக்கு மதிப்பு போயிருக்கும்னு ஒரு பாகிஸ்தானி சொல்றான்…..” இப்படி ஒருத்தர் டிவிட் செய்திருந்தார். கிரிக்கெட்டில் நமது பங்காளியான பாகிஸ்தான்தான் நமக்கு எதிரி. அந்த நாட்டு ரசிகர் சொன்ன அந்த வார்த்தைகளைவிட பெரிய பெருமை கோலிக்கு கிடைக்கப்போவதில்லை. டெண்டுல்கரின் தீர்க்கம் கங்குலியின் புலிப்பாய்ச்சல் என இரண்டும் ஒருங்கே கொண்டு ஆஸ்திரேலியாவுடன் கோலி ஆடிய தாண்டவம் பார்த்தவர்களின் பல்ஸ்களை எகிற வைத்தது. கிளப் மேட்ச்களில் மட்டுமல்ல, இந்தியாவுக்காக விளையாடும் மேட்ச்களிலும் தெறிக்கவிடும் கோலி கிரவுண்ட்க்கு வெளியவும் லவ்வபிள் இடியட்தான் !

“நம்ம பய”

பேஸ்புக்கில் வாரத்துக்கு ஒரு தடவை ப்ரோபைல் படம் மாத்துவது, ட்விட்டரில் டிரண்டுக்கு ஏற்ற டிவிட் எழுதுவது, இன்ஸ்டாகிராமில் விதவிதமாக புகைப்படம் எடுத்து கொலேஜ் செய்து அப்லோட் செய்வது என அப்டேட் இளைஞனாக வலம் வருவார். புது டிசர்ட் வாங்கினால் கூட அதை போட்டு லட்சக்கணக்கில் லைக்ஸ் தேத்துவது என கோலி நம்மை போலவே சக நெட்டிசன்தான், தான் கடவுளல்ல என ஒவ்வொரு கணமும் நமக்கு உணர்த்தும் நண்பன்.

பெண்களுக்கு “மரியாதை மரியாதை”

“அவங்க ஒழுங்க ட்ரஸ் பண்ணுனா ஏன் ஈவ் டீஸிங்,ரேப் நடக்கப்போகுது”ன்னு டெல்லி யூத் பசங்கள் பெண்கள் மீதான வன்முறைக்கு ஆதரவா பேசிகிட்டு இருந்த போதும், ‘சக ப்ளையேர்ஸ்’ இது பற்றி மூச்சு விடாம இருந்த போதும்,

அன்பான பெண்களே,

உங்கள் அதிர்ச்சியடைய செய்ததற்கு மன்னிக்கவும்,

விசிலடிப்பவர்களே,

சீண்டுபவர்களே,

உத்து உத்து பார்ப்பவர்களே,

போலி நட்புவாதிகளே,

“எதார்த்தமாக” உரசுபவர்களே,

அவர்களின் அந்தரங்கங்களை ஒளிந்திருந்து பார்ப்பவர்களே,

பெண்களை நம்மிடமிருந்து நிரந்தரமாக பிரித்து விடாதீர்கள்

இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்”

என பெண்களை மதித்து முகநூலில் ஸ்ட்டேடஸ் எழுதினார். கடந்த மேட்சில் அற்புத ஆட்டத்தை கோலி வெளிப்படுத்திய போது, “அனுஷ்கா அவரைவிட்டு போய்த்தொலைந்ததால்தான் நன்றாக விளையாடியானர்” என சோசியல் மீடியாவில் கருத்துக்கள் பகிரப்பட்டன. அன்றிரவே மிகுந்த கோபத்துடன் “அவரும் நானும் பிரிந்தது உண்மைதான், ஆனால் அவரும் என் வெற்றிக்கு உறுதுணையாகத்தான் இருந்தார். அவரை பேச யாருக்கும் தகுதியில்லை” என ட்விட் எழுதி விலகிப்போன காதலியின் பெயருக்கு களங்கம் ஏற்படாமல் தவிர்த்தார் “ச்சோ ஸ்வீட் கோலி”.

“அடையாளம்”

சர்வதேச பத்திரிக்கையான போர்ப்ஸில் 30 வயதுக்கு கீழான புகழ்பெற்ற 30 பேர்கள் பட்டியலில் இடம்பெறுவது சாதாரண உயரம் இல்லை. அதில் இன்னும் சிறப்பான ஒன்று என்ன வென்றால் அந்த 30 பேர்களில் இவருடன் இருக்கும் ஆட்கள் ஆஸ்திரேலிய நடிகர் லியாம் ஹெம்ஸ்வொர்த், பிரபல சறுக்குவிளையாட்டு வீராங்கனை ஸ்டிஃபானி கில்மோர் போன்றவர்கள். அங்கு இடம் பெற்ற ஒரே இந்தியர் கோலிதான். அதாவது 130 கோடி பேர்களில் ஒருவன் “தனி ஒருவன்”.

“வெறும் விளையாட்டு பிள்ளை இல்லை”

கோலி என்பவர் வெறும் விளையாட்டு பிள்ளை இல்லை ‘அதுக்கும் மேல’ என நிரூபிக்கிறார். கோடி கோடியாய் கொட்டும் விளம்பர வருமான பணத்தை உருப்படியான வழிகளில் முதலீடு செய்கிறார். ஐரோப்பிய கால்பந்து வீரர்களுக்கும் இப்படி பணம் கொட்டினாலும் அவர்கள் வில்லாக்கள் வாங்குவதிலும், எஸ்டேட்கள் வாங்குவதிலும் கவனம் செலுத்துகின்றனர். “சீசல்” (உளி) என்கிற பெயரில் 190 ஜிம்களை திறக்க 90 கோடி ரூபாய்களை முதலீடு செய்துள்ளார் கோலி. 2015 தொடங்கிய இந்த முதலீடு இந்த மார்ச் முதல் வருமானம் கொடுக்க துவங்கியுள்ளது.

“நம்பிக்கை அதானே எல்லாம்”

டெண்டுல்கர் சற்று ஃபார்ம் அவுட் ஆகித்தான் ரிட்டயர் ஆனாலும், அவரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாமல் இருந்தது காரணம், நம்பிக்கை. அணி எத்தகைய இடரை சந்தித்தாலும் டெண்டுல்கர் களத்தில் இறங்கும் போது ஒரு நம்பிக்கை பிறக்கும், அவர் அவுட் ஆனால் ஸ்டேடியத்தை விட்டு மக்கள் எழுந்து செல்வதை கண்டிருப்போம், காரணம் நம்பிக்கை. அதே நம்பிக்கையை மீண்டும் அணியில் பெற்றிருப்பவர் கோலி. கோலி களத்தில் இருக்கும் வரை வெற்றி விலகிச்செல்லவில்லை என நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கும். அதை விதைத்துள்ளார் இந்த டாட்டூ ஹய்.

“போர்க்குணம்”

மைதானத்தை ரோம் நகரத்து அடிமைகளின் சண்டை போல ரத்தம் தெறிக்கும் களமாக சிலரால் மட்டுமே மாற்ற முடியும், “நீ எவ்வளவு ரன் வேண்டுமானாலும் அடி – அதை அடித்து வெற்றி பெற நான் இருக்கிறேன்” என்கிற தன்னம்பிக்கையுடன் களத்தில் இறங்கவும், பர்ஸ்ட் பேட்டிங்காக இருந்தால் ” இதே அடிக்கிறேன் முடிந்தால் தடுத்துப்பார்” என ஹாமர் ஷாட் அடிகளை ரணகளமாக இறக்குவதில் கோலிக்கு நிகர் கோலிதான். இதோ ஐசிசி தரவரிசைப்பட்டியலில் ஒரு நாள் போட்டியிலும், டி20 போட்டிகளிலும் 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார் கோலி. இந்த தொடர் முடியும் முன் முதலாவது இடத்தில் இருப்பார்.

போலோ கோலிகே ஜே!�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *