Tசோனாக்‌ஷியின் தீபாவளி ஸ்பெஷல்!

Published On:

| By Balaji

திரைப்படங்களில் நடிப்பதைப் போலவே பிரபல மாத இதழ்களின் அட்டைப் படங்களை அலங்கரிப்பதும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் சோனாக்‌ஷி சின்ஹா தற்போது ஹலோ இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றிருப்பது குறித்து பகிர்ந்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்த லிங்கா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் சோனாக்‌ஷி சின்ஹா. திரைத் துறையில் அறிமுகமாகி எட்டு ஆண்டுகளே ஆனபோதும் முக்கியமான படங்களில் நடித்து இந்தியத் திரையுலகில் கவனிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளார். தொடர்ந்து பல படங்களைக் கைவசம் வைத்துள்ள இவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஹலோ வார இதழின் அட்டைப் படத்தில் இடம்பெற்றுள்ளார். குறைவான அணிகலன்கள் அணிந்து இந்திய பாரம்பரியமிக்க ஆடையில் உள்ள புகைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுவருகிறது.

அந்தப் படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றி [தீபாவளி ஸ்பெஷல்](https://www.instagram.com/p/BpoldVmAqyD/?taken-by=aslisona) என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் புகைப்படத்தை கால்ஸ்டோன் ஜூலியன் எடுத்துள்ளார். மேகா கோபராய் ஒப்பனை செய்துள்ளார். இது தவிர அட்டைப் படத்திற்கு தேர்வாகாத புகைப்படங்களையும் சோனாக்‌ஷி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சோனாக்‌ஷி இதற்கு முன் லொபிஷியல், அடெலியர், பிலிம்ஃபேர் உள்ளிட்ட இதழ்களின் அட்டைப் படங்களில் இடம்பெற்றுள்ளார்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share