Tசூர்யாவுக்கு கரம் கொடுத்த கமல்

Published On:

| By Balaji

‘கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு’ என நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் சூர்யாவின் பேச்சுக்கு ஆதரவளித்துள்ளார்.

தொடர்ந்து கல்வி சார்ந்து தீவிரமாக களத்தில் செயற்பட்டு வருபவர் சூர்யா. அதனால் கல்வி சார்ந்த தனது பார்வையை சமீப காலங்களில் வெளிப்படையாகவே கூறி வருகிறார். கடந்த ஜுலை 13ஆம் தேதி, சாலிகிராமத்தில் உள்ள சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய அரசு கொண்டுவரும் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பேசியுள்ளார். அரசின் மும்மொழிக் கொள்கை, குறைவான ஆசிரியர்கள் இருந்தால் மூடப்படும் பள்ளிகள், சரிசமமற்ற நுழைவுத் தேர்வுகள், நீட் குறித்த பார்வை என அரசின் ‘வரைவு அறிக்கை’க்கு எதிராக குரல் கொடுத்தார்.

கடும் சர்சையை ஏற்படுத்திய சூர்யாவின் பேச்சுக்கு, பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எச்.ராஜா, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அரைவேக்காட்டுத்தனமாக சூர்யா பேசுகிறார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கடுமையாக விமர்சித்திருந்தார். அதே வேளையில் சீமான், கீ.வீரமணி உள்ளிட்ட பலரும் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்:

ஏழை மற்றும் நடுத்தர மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக தம்பி சூர்யா மற்றும் அவரது குடும்பத்தார் பல வருடங்களாக உதவி செய்து வருகிறார்கள். எனவே கல்வி குறித்து பேசுவதற்கான உரிமை சூர்யாவுக்கு உண்டு.

புதிய கல்விக் கொள்கை குறித்த தம்பி சூர்யாவின் கருத்துகள் பலவற்றில் எனக்கும் உடன்பாடு உண்டு. மக்களின் கருத்தை அறிவதற்காக என்று சொல்லப்பட்டு வெளியிடப்பட்டிருக்கின்ற ‘வரைவு அறிக்கை’ மீது, கருத்து சொன்னதற்காக சூர்யா மீது அவதூறு பேசி வரும் ஆளும் அரசுகளின் ஆதிக்கப் போக்கினை மக்கள் நீதி மய்யம் வன்மையாக கண்டிக்கிறது. தம்பி சூர்யாவிற்கு எனது ஆதரவு கண்டிப்பாக உண்டு’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களிலும் சூர்யாவிற்கான ஆதரவுக் குரல்கள் அதிகரித்துவருகின்றன.

**

மேலும் படிக்க

**

**[டிஜிட்டல் திண்ணை: சூர்யாவை தொலைபேசியில் மிரட்டிய அமைச்சர்!](https://minnambalam.com/k/2019/07/16/84)**

**[மணிரத்னம் – நயன்: உருவாகும் வித்தியாசமான கூட்டணி!](https://minnambalam.com/k/2019/07/17/20)**

**[தயாராகிறது பாகுபலி 3?](https://minnambalam.com/k/2019/07/16/26)**

**[30-45: தினகரனின் அதிரடித் திட்டம்!](https://minnambalam.com/k/2019/07/16/18)**

**[ “மாற்று வேட்பாளரை மாற்றுங்கள்”- துரைமுருகனிடம் ஸ்டாலின்](https://minnambalam.com/k/2019/07/16/53)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share