கோடை விடுமுறை வசூலைக் குறிவைத்து Mr.லோக்கல், மான்ஸ்டர், நட்புனா என்னனு தெரியுமா ஆகிய மூன்று திரைப்படங்கள் வெளியாகின்றன. இவற்றில் சிவகார்த்திகேயன், நயன்தாரா இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கும் Mr.லோக்கல் திரைப்படம் திரையரங்குகள் வட்டாரத்திலும், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகார்த்திகேயன் திரையுலக வரலாற்றில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களுக்குப் பின் அவர் நடிப்பில் வெளியான படங்கள் முதலீடு அளவுக்குப் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார்.
வில்லன் இல்லாத முழு நீள காமெடி படம் என அறிவிக்கப்பட்டிருப்பதால் அனைத்துத் தரப்பினரும் தியேட்டரை நோக்கி வரக்கூடிய சாத்தியமிருக்கிறது என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள். அதற்கேற்ப தமிழ்நாடு முழுவதும் Mr.லோக்கல் சுமார் 500 திரைகளில் திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் இயக்குநர் ராஜேஷ் மதுரை பகுதி உரிமையை அவுட்ரேட் அடிப்படையில் வாங்கி வெளியிடுகிறார். படத்தை வாங்குவதற்கு விநியோகஸ்தர்கள் போட்டி போட்டபோதும் சென்னை – செங்கல்பட்டு – வடஆற்காடு, தென்னாற்காடு ஏரியாக்களில் படத்தை வாங்கியுள்ள சக்தி பிலிம் பேக்டரி நேரடியாக வெளியிடுவது ஏன் என்றபோது படத்தின் மீது நம்பிக்கையிருப்பதால் ரிஸ்க் எடுத்திருக்கிறோம் என்றார் தமிழ்நாடு விநியோகஸ்தர் சக்திவேலன்.
இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா நீண்ட நாட்களுக்குப் பின் நாயகனாக நடித்திருக்கும் படம் மான்ஸ்டர். எலியை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இந்தப் படம், முழு நீள காமெடி என்கிறது தயாரிப்பு தரப்பு. ட்ரீம் வாரியர் தயாரிப்பில் அந்நிறுவனமே உலகம் முழுவதும் நேரடியாக வெளியிடுகிறது.
லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வெளியிடும் நட்புனா என்னனு தெரியுமா படத்தின் ரீலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு திரைக்கு வரவில்லை. இம்முறை உறுதியாக வந்துவிடுவோம் எனக் கூறும் தயாரிப்பு தரப்பு நேரடியாகப் படத்தை வெளியிடுகின்றனர்.
சிவா அரவிந்த் இயக்க கவின் – ரம்யா நம்பீசன் ஜோடியா நடித்துள்ள இந்தப் படத்தைத் தயாரிப்பு நிறுவனமே நூற்றுக்கும் குறைவான திரைகளில் நேரடியாக வெளியிடுகிறது.
சீமராஜா தோல்வியிலிருந்து Mr.லோக்கல் படத்தின் மூலம் சிவகார்த்தியேன் மீண்டு வருவாரா என்பதே தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்றைய விவாதப் பொருள்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: சந்திரபாபு நாயுடு -துரைமுருகன் சந்திப்பு; ஸ்டாலின் நடத்திய விசாரணை!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/93)
**
.
**
[ரசிகர்களை ஏமாற்றிய மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/70)
**
.
**
[ஓட்டப்பிடாரம்: வீட்டுக்கு வீடு அதிமுகவின் டெலிவரி அடையாளம்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/16/26)
**
.
**
[இந்தியன் 2 ஷங்கரின் அடுத்த பிளான்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/45)
**
.
**
[அஜித் 60ல் இணையும் இளம் இசையமைப்பாளர்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/15/72)
**
.
.�,”