சிவகார்த்திகேயன் வாழ்வில் மறக்கமுடியாத சம்பவம் ஒன்று இருக்கிறது. அது, ரஜினியின் முன்னால் அவரைப்போலவே மிமிக்ரி செய்தது. ஹீரோ அந்தஸ்துக்கு வளர்ந்த பிறகு, மேடைகளில் மிமிக்ரி செய்வதை தவிர்த்துவிட்ட சிவகார்த்திகேயன் நீண்ட நாட்களுக்குப் பிறகு மிமிக்ரி செய்தது அந்த மேடையில் தான். அதுபோலவே, ரஜினியின் மேனரிசத்தையும் சிவகார்த்திகேயன் மீண்டும் கையில் எடுக்கும் சூழல் இயக்குநர் எம்.ராஜேஷுடன் அவர் இணைந்திருக்கும் படத்தில் ஏற்பட்டுள்ளது.
பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த்-விஜயசாந்தி நடித்த மன்னன் திரைப்படத்தின் ரீமேக் தான், எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்தி- நயன்தாரா நடிக்கும் திரைப்படம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதேபோன்ற ஹீரோ-ஹீரோயின் கேரக்டர்களை உருவாக்கி, அதனை இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றதுபோல மாற்றியமைத்திருப்பதாகப் படக்குழுவினரும் தெரிவிக்கின்றனர்.
விஜயசாந்தியின் கேரக்டரை வேறு விதமாக மாற்றி வெளிப்படுத்தும் சவாலை ஏற்றுக்கொண்டே நயன்தாரா இந்த கேரக்டரை கையிலெடுத்திருப்பதாகவும் கூறுகின்றனர். சமீபத்தில் வெளியான ‘சீமராஜா’ திரைப்படத்தின் டிரெய்லரில், ரஜினியின் பல மேனரிசங்களை சிவகார்த்தி தொட்டுச்சென்றிருப்பது, மேற்குறிப்பிட்ட தகவல்களை உறுதிப்படுத்துவதாகவே இருக்கிறது.�,