tசாம்சங் துணைத் தலைவருக்குத் தண்டனை உயர்வு?

public

லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவரான லீ ஜே-யாங் சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளாக உயர்த்துமாறு தென்கொரிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவராக உள்ள லீ ஜே-யாங் லஞ்சம் அளித்தது, வெளிநாடுகளில் சொத்துகளை முறைகேடாக மறைத்து வைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்காகக் கடந்த ஆகஸ்ட் மாதம் ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். இந்த நிலையில் இவருடைய சிறைத் தண்டனையை 12 ஆண்டுகளாக உயர்த்துமாறு சிறப்பு வழக்கறிஞர் பார்க் யங்-சூ சியோல் நீதிமன்றத்தில் புதன்கிழமை (டிசம்பர் 27) முறையிட்டுள்ளார். இந்த வழக்கின் மீதான உத்தரவை அடுத்த ஆண்டு ஜனவரியில் நீதிமன்றம் பிறப்பிக்கவுள்ளது.

தென்கொரியாவைத் தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் சாம்சங் நிறுவனம், உலகம் முழுவதும் மிகப்பெரிய சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது. மொபைல்போன் முதல் வீட்டு உபயோகப் பொருள்கள் வரை இந்நிறுவனத்தின் அனைத்து மின்னணு பொருள்களும் உலகம் முழுவதும் பிரபலமான ஒன்றாகவே விளங்குகின்றன. இந்த நிலையில் இந்நிறுவனத்தின் மீதான லஞ்ச ஊழல் புகாரால் சந்தையில் எந்தவிதமான தாக்கமும் ஏற்படப் போவதில்லை என்கின்றனர் தொழில்துறை வல்லுநர்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0