tகிச்சன் கீர்த்தனா: வெந்தயக்கீரை சப்பாத்தி!

public

**தேவையானவை:** கோதுமை மாவு – 2 கப், கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், வெந்தயக்கீரை – 2 கட்டு, மாங்காய்த்தூள் – 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – நெய் கலவை – தேவையான அளவு.

**செய்முறை:** வெந்தயக்கீரையை இலைகளாக நறுக்கிக்கொண்டு, தண்ணீரில் அலசி, சுத்தம் செய்துகொள்ளுங்கள். கீரையுடன், ஒரு டீஸ்பூன் நெய், கோதுமை மாவு, கடலை மாவு, மஞ்சள்தூள், மாங்காய்த்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளுங்கள். எண்ணெய் – நெய்யைக் கலந்துவைத்துக் கொள்ளுங்கள். பிசைந்த மாவைச் சிறிய சப்பாத்திகளாகத் திரட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் – நெய் கலவையை விட்டு வேகவையுங்கள்.

**குறிப்பு:** எண்ணெய் – நெய் கலவை சப்பாத்தி சுடுவதற்கு எப்போதுமே எண்ணெய் அரை கப் என்றால், நெய் ஒரு டேபிள்ஸ்பூன் என்ற விகிதத்தில் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

**கீர்த்தனா தத்துவம்:**

செத்த பிறகு சாம்பலா இருக்கணும்.

வாழும்போது EXசாம்பலா இருக்கணும்! (Example)

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *