ஊரடங்கு நிலையிலும் பரவலாகக் கிடைக்கும் ‘ஏழைகளின் கனி’ என்று அழைக்கப்படும் பப்பாளியில் நோய்க் கிருமிகளை எதிர்க்கும் தன்மை அதிக அளவில் உள்ளது. மேலும் 100 கிராம் பப்பாளிப்பழத்தில் 43 கலோரி ஆற்றல் அடங்கியுள்ளது. வீட்டில் அடைப்பட்டிருக்கும் அனைவருக்கும் இந்தப் பப்பாளிப்பழ மில்க் ஷேக் செய்து கொடுங்கள். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இந்த மில்க் ஷேக்.
**என்ன தேவை?**
பப்பாளிப்பழம் – அரை கப்
பால் – 250 மி.லி
சர்க்கரை (அல்லது) தேன் – 2 டீஸ்பூன்
சீரகப்பொடி (அல்லது) சோம்பு – கால் டீஸ்பூன்
தண்ணீர் – 200 மி.லி.
ஐஸ் க்யூப்ஸ் – 2
**எப்படிச் செய்வது?**
பாலை நன்கு காய்ச்சி ஆற வைக்கவும். பப்பாளிப்பழத்தை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். அதில் காய்ச்சிய பாலைவிட்டு மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் அரைத்தெடுத்து டம்ளருக்கு மாற்றவும். அதில் சர்க்கரை (அல்லது) தேன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு சீரகப்பொடி (அல்லது) சோம்பு சேர்த்து, ஐஸ் க்யூப்ஸ் போட்டுப் பரிமாறவும்.
[நேற்றைய ரெசிப்பி: தக்காளி ஆம்லெட்](https://minnambalam.com/k/2020/04/08/3)�,