tகிச்சன் கீர்த்தனா: சின்ன வெங்காயம் துவையல்

Published On:

| By Balaji

‘கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது’ என்கிற பழமொழி கடுகுக்குப் பொருந்துவது போல், சின்ன வெங்காயத்துக்கும் பொருந்தும். கேழ்வரகு தோசை, கம்பு தோசை போன்ற தோசை வகைகளுக்கு இந்தச் சின்ன வெங்காயம் துவையல் காரசாரமாக அற்புதமாக இருக்கும். இன்னும் கொஞ்சம் சாப்பிடத் தூண்டும்.

**என்ன தேவை?**

சின்ன வெங்காயம் – 25

காய்ந்த மிளகாய் – 12

கல் உப்பு – தேவையான அளவு

**எப்படிச் செய்வது?**

சின்ன வெங்காயத்தைத் தோலுரித்து நன்றாகக் கழுவிக்கொள்ளவும். ஒரு சிறிய பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரைச் சூடாக்கவும். பின்னர் அதில் உரித்த சின்ன வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து, அடுப்பை மிதமான தீயில் வைத்து வேகவிடவும். வெங்காயம் லேசாக நிறம் மாறியதும் அடுப்பை அணைத்துவிடவும். பின்னர் ஒரு தட்டில் வெந்த வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாயை நன்கு ஆறவிடவும். ஒரு சிறிய மிக்ஸி ஜாரில் கல் உப்பு, வேகவைத்த வெங்காயம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைச் சிறிய கிண்ணத்துக்கு மாற்றிக்கொள்ளவும்.

**குறிப்பு**

சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாயைச் சிறிது நேரம் கொதிக்கவைத்து, பின் துவையலாக அரைக்கும்போது வெங்காயத்தில் உள்ள நெடி குறைந்து சுவையாக இருக்கும்.

[நேற்றைய ரெசிப்பி: தேங்காய்ப்பால் கறிவேப்பிலை ஜூஸ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2020/03/09/3)�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share