“அதே இட்லிதானா?” என்ற சலிப்பைப் போக்குவதற்கு மாற்றாக, “அட இன்னிக்கு இந்த இட்லியா?” என சுவாரஸ்யமாகச் சாப்பிடும் அளவுக்கு வித்தியாசமான இட்லி வகைகளை அவ்வப்போது வீட்டில் செய்துகொடுங்கள். அவற்றில் ஒன்று ஓட்ஸ் இட்லி. அதையும் செய்து பார்ப்போமா…
**தேவையான பொருள்கள்:**
ஓட்ஸ் – 2 கப், தயிர் – அரை கப், உப்பு – தேவையான அளவு.
**தாளிக்க:**
எண்ணெய்- 1 தேக்கரண்டி, கடுகு- அரை தேக்கரண்டி, கடலைப்பருப்பு – கால் தேக்கரண்டி, வெள்ளை உளுத்தம்பருப்பு – கால் தேக்கரண்டி, பச்சைமிளகாய் – 2, துருவிய கேரட் – 1 கப், கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவு.
**செய்முறை:**
1. முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் ஓட்ஸைப் போட்டுப் பொன்னிறமாக வறுத்து, பின் மிக்ஸியில் பொடி செய்து ஒரு பாத்திரத்தில் போட்டுத் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
2. பின்பு அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பின் பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை மற்றும் கேரட் சேர்த்து வதக்கி, 2 நிமிடங்கள் கிளறி இறக்கி, அதைப் பொடி செய்த ஓட்ஸுடன் சேர்க்க வேண்டும்.
3. பிறகு அதில் தயிர் ஊற்றி, இட்லி மாவு பதத்துக்குக் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாகத் தண்ணீரை சேர்க்கக் கூடாது. உடனடியாக இட்லிகளாக வார்க்காமல் குறைந்தது ஒரு மணி நேரம் வெளியே வைக்கவும்.
4. பின்னர் அந்த மாவை இட்லித்தட்டுகளில் எண்ணெய் தடவி இட்லிகளாக ஊற்றி எடுத்தால், சுவையான ஆரோக்கியமான ஓட்ஸ் இட்லி தயார்.
**கீர்த்தனா சிந்தனைகள்:**
‘அப்புறம், உங்களைப் பத்தி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்’னு யாராவது பேச்சை ஆரம்பிச்சா, உடனே நாம பண்ணின தப்புகள்ல ஒரு 7-8 ஞாபகத்துக்கு வந்துட்டு போகுது…�,