மழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் மழைநீரைச் சேமிக்க காவிரியின் குறுக்கே மூன்று தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் நேற்று (ஜூலை 15) பொதுப்பணித் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் கே.என்.நேரு, கொள்ளிடத்தில் உபரிநீரைச் சேமிக்க போதுமான நடவடிக்கை எடுக்காததால் மழைக் காலங்களில் வீணாக உபரிநீர் கடலில் கலப்பதாகத் தெரிவித்தார்.
இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. கரூர் நாமக்கல் இடையே உள்ள காவிரி பகுதியில் தடுப்பணைகள் கட்டப்படும். அதுபோன்று காவிரியின் குறுக்கே மூன்று இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளுக்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். மேலும், மழைக் காலங்களில் மழைநீர் வீணாகும் இடங்களில் தடுப்பணைகள், கதவணைகள் கட்டப்படும் எனத் தெரிவித்த அவர், “நாமக்கல், ராமநாதபுரம், பெரம்பலூர், திருவண்ணாமலை, ஈரோடு, சேலம், கடலூர், மதுரை, புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் ஆகிய இடங்களில் 12 தடுப்பணைகள் ரூபாய் 105.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்” என்றார்.
2019-20ஆம் ஆண்டின் குடிமராமத்து பணிக்காக 1,829 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நீர்நிலை பாதுகாக்கத் தமிழக அரசு தவறிவிட்டதாகத் தெரிவித்து 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.
**
மேலும் படிக்க
**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதியை மாசெக்கள் தேடி வரவேண்டும்- அறிவாலயத்தின் மெசேஜ் !](https://minnambalam.com/k/2019/07/15/72)**
**[அதிமுக தலைவராகிறாரா ரஜினி?](https://minnambalam.com/k/2019/07/15/18)**
**[திமுகவில் இணைந்த தேமுதிக மா.செ!](https://minnambalam.com/k/2019/07/14/48)**
**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**
**[ நியூசிலாந்துக்கு ‘விதி’ செய்த ‘சதி’!](https://minnambalam.com/k/2019/07/15/46)**
�,”