Tகழிவுகளைக் கொட்டினால் அபராதம்!

Published On:

| By Balaji

}பறக்கும்போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமான நிறுவனங்களுக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016இல் டெல்லி விமான நிலையம் அருகே வீட்டின் மீது தரையிறங்கும் விமானங்கள் மனிதக் கழிவுகளைக் கொட்டுவதாக ஒருவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகாரளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் ஒழுங்குமுறைக் குழு ஆய்வை மேற்கொண்டது. ஆனால், இந்தக் குழு புகாரை மறுத்துவிட்டது. இருப்பினும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விமானங்கள் மனிதக் கழிவைப் பறக்கும்போது கொட்டினால் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அனைத்து நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 2016ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி சத்வந்த் சிங் தாஹியா மற்றும் அதே ஆண்டின் தொடக்கத்தில் பெண் ஒருவர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தொடர்ந்திருந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி விமானம் தரையிறங்குவதற்கு முன்பாக கழிவுத் தொட்டி காலியாக இருந்தால் அபராதம் விதிக்கப்படும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share