Tஓய்வுக்குப்பின் பாஜகவில் தோனி?

Published On:

| By Balaji

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றவுடன் மகேந்திர சிங் தோனி பாஜகவில் சேர்வதற்கே அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சய் பஸ்வான் தெரிவித்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரோடு தோனி ஓய்வை அறிவிப்பார் என்று பேச்சு கிளம்பியது. ஆனால், ஓய்வுபெற வேண்டும் என்று அவரை யாரும் நிர்பந்திக்கக் கூடாது என சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர். இந்த நிலையில் ஓய்வுக்குப் பின் அவர் பாஜகவில் இணையவுள்ளதாக அக்கட்சியினர் பேசி வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக ரகுபர் தாஸ் பதவி வகித்து வருகிறார். அங்கு டிசம்பர் மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தோனியை பாஜக சார்பில் களமிறக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, கௌதம் கம்பீர், தோனி ஆகியோரை பாஜக தலைவர் அமித் ஷா சந்தித்துப் பேசினார். அதன்பின் பாஜகவில் இணைந்த கம்பீருக்கு டெல்லி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் கம்பீர் வெற்றி பெற்று தற்போது எம்.பி.யாக உள்ளார்.

இந்த நிலையில் ஜார்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக தோனியையும் பாஜகவில் இணைக்க தீவிரமான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகக் கூறுகின்றனர்.

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “தோனியிடம் நீண்ட காலமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தபின் நிச்சயம் பாஜகவில் சேர்வதற்கான சாத்தியங்கள் உள்ளன. தோனி எனது நெருங்கிய நண்பர். உலகளவில் அவர் பெயர் பெற்ற வீரராக இருந்தாலும், அவரை கட்சிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளும் நடந்து வருகின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

**

மேலும் படிக்க

**

**[அவசரப்பட்டுவிட்டேனோ? புலம்பிய தங்கம்](https://minnambalam.com/k/2019/07/13/18)**

**[நிர்வாகிகள் விலகுவதை தடுக்க…சசிகலா போட்ட பட்ஜெட்!](https://minnambalam.com/k/2019/07/13/7)**

**[டிஜிட்டல் திண்ணை: திமுக எம்.எல். ஏ.க்களுக்கு லைஃப் செட்டில்மென்ட்- கூல் எடப்பாடி](https://minnambalam.com/k/2019/07/13/72)**

**[அத்தி வரதர்: வரலாறு எழுப்பும் விடையற்ற வினாக்கள்!](https://minnambalam.com/k/2019/07/13/17)**

**[ மோடிக்கு தயாநிதியை தூது அனுப்பினாரா ஸ்டாலின்?](https://minnambalam.com/k/2019/07/12/24)**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share