சசிகுமார், சரத்குமார் இணைந்து நடிக்கும் புதிய பட டைட்டில், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் தெலுங்கு பட டீசர் என சலீம் இயக்குநர் NV நிர்மல் குமார் இயக்கத்தில் உருவான இரு படங்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான சலீம் படத்தை இயக்கியவர் NV நிர்மல் குமார். அதனைத் தொடர்ந்து அர்விந்த் சாமி, த்ரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2 திரைப்படத்தை இயக்கினார். இன்னும் அப்படம் வெளிவராத நிலையில் தெலுங்கில் உதய் சங்கர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் மிஸ்மேட்ச் என்ற படத்தையும், தமிழில் சசிகுமார், சரத்குமார் கூட்டணியில் தன் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தினார் நிர்மல் குமார்.
இந்நிலையில், இன்று(ஜுலை 11) மிஸ்மேட்ச் படத்தின் டீசரும், சசிகுமார்-சரத்குமார் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
*நா நா* எனத் தலைப்பிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சசிகுமார் முன்னாள் காவல்துறை அதிகாரியாக நடிக்கின்றார். சசிகுமாரின் முகத்தின் மீதுள்ள சரத்குமாரின் முகமூடி அவிழ்வது போல இப்போஸ்டர் அமைந்துள்ளது. கிரைம் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகும் என யூகிக்க முடிகின்றது.
கல்பதரு பிக்சர்ஸ் சார்பில் பி கே ராம் மோகன் ‘நா நா’ படத்தை தயாரிக்கின்றார்.
**
மேலும் படிக்க
**
**[வைகோவுக்கு இன்னொரு செக்!](https://minnambalam.com/k/2019/07/10/78)**
**[இந்திய அணியின் ‘அந்த மூன்று பேர்’!](https://minnambalam.com/k/2019/07/11/22)**
**[மகனுக்காக வேலூரில் முகாமிட்ட துரைமுருகன்](https://minnambalam.com/k/2019/07/11/21)**
**[டிஜிட்டல் திண்ணை: உதயநிதிக்காக இடப்பட்ட உத்தரவு!](https://minnambalam.com/k/2019/07/10/80)**
**[இந்திய அணியை வெளியேற்றிய காரணிகள்!](https://minnambalam.com/k/2019/07/11/48)**
�,”