Tஒரு பாடலுக்கு நடனமாடும் தமன்னா

public

நடிகை தமன்னா கன்னட திரைப்படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடவிருக்கிறார்.

தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தற்போது தமிழில் கண்ணே கலைமானே படத்தை முடித்துவிட்ட தமன்னா, தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி மற்றும் குயின் ரீமேக்காக உருவாகி வரும் தட் இஸ் மகாலட்சுமி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து கன்னட படம் ஒன்றில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவதற்குச் சம்மதித்துள்ளார் தமன்னா. கன்னட ஹீரோ யாஷ் நடிக்கவுள்ள கே.ஜி.எஃப் என்கிற படத்தில்தான் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருக்கிறார். இந்தச் செய்தியை தமன்னாவின் தந்தை சந்தோஷ் பஹிடா உறுதிப்படுத்தியுள்ளார். இண்டர்நேஷனல் பிஸினஸ் டைம்ஸ்-க்கு அளித்துள்ள பேட்டியில், “இன்றைய தினம் ஒத்திகையில் இருக்கிறார், நாளை முதல் மூன்று நாட்களுக்கு பெங்களூருவில் படப்பிடிப்பில் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “தென்னிந்திய திரைப்படத்தில் மிகவும் விரும்பப்பட்ட நடிகர்களில் ஒருவராகவும், கன்னடத்தில் தனது இருப்பை தக்கவைக்கவும் விரும்புகிறார். தெலுங்கில் இரு படங்களும், தமிழில் மூன்று படங்களும் தற்போது கைவசம் உள்ளது. இதனோடு தற்போது மூன்று படங்களை நிறைவு செய்யும் வேலைகளிலும் இருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் கவனம் செலுத்துவதற்கான நேரம்தான் தற்போது இருக்கிறது” என்றார்.

ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடுவது தமன்னாவுக்கு புதிது அல்ல. அதேபோல கன்னடமும் அவருக்குப் புதிதல்ல. ஏற்கனெவே கன்னடத்தில் ஜாகுவார் என்கிற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டு அங்கே தனது முதல் எண்ட்ரியை பதிவு செய்தவர் தமன்னா.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *