குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்பாராத அளவு வாக்குப் பதிவு நடைபெற்றுக் கொண்டிருப்பதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 17-ஆம் தேதி(இன்று) நடைபெறுகிறது. பாஜக சார்பில் பீகார் முன்னாள் ஆளுநர் ராம்குமார் வேட்பாளராகவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மக்களவை முன்னாள் சபாநாயகர் மீராகுமார் வேட்பாளராகவும் போட்டியிடுகின்றனர். இருதரப்பிலும் குடியரசுத் தலைவர் வேட்பாளராகத் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் சென்னையில் தனது வாக்கைப் பதிவு செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “வாக்குப்பதிவு எதிர்பாராத அளவு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சாதாரண மக்கள் வாக்களிப்பதை விட அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களும் வேகமாக வாக்களித்து வருகின்றனர். தற்போது வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருப்பதை பார்த்தால் 3 மணிக்குள் முடிந்து விடும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் 12 மணி அளவில் குடியரசுத் தலைவருக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.�,