Tஎடைக்கு எடை தாமரை: மோடி வழிபாடு!

Published On:

| By Balaji

குருவாயூர் கோயிலுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன் எடைக்கு எடை தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கை கொடுத்தார்.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றி நரேந்திர மோடி கடந்த மே 30 ஆம் தேதி பிரதமராகப் பதவியேற்றார். இந்நிலையில் இன்று (ஜூன் 8) கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோயிலில் வழிபாடு நடத்துவதாக அறிவித்திருந்தார். மோடி வருகையை முன்னிட்டு கேரளாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இன்று காலை சுமார் 9.50 க்கு, சிறப்பு ஹெலிகாப்டர் மூலம் கொச்சி வந்தடைந்தார். கொச்சி விமான நிலையத்திற்கு வந்த அவரை அம்மாநில ஆளுநர் சதாசிவம், மத்திய அமைச்சர் முரளிதரன், மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், திருச்சூரில் உள்ள புகழ் பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோயிலுக்குச் சென்று வழிபட்டார். அவருடன் கேரள ஆளுநர் சதாசிவம் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஆகியோர் வழிபட்டனர். வழிபாடு குறித்து மோடி தனது டிவிட்டர் பக்கத்தில், “குருவாயூர் கோயில் தெய்வீகமானது மற்றும் அற்புதமானது. இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் செழிப்புக்காக இந்த கோயில்களில் பிரார்த்தனை செய்தேன்” எனப் பதிவிட்டுள்ளார். வழிபாட்டின் போது அவரது எடைக்கு ஏற்றாற்போல் தாமரைப் பூக்களை அவர் துலாபாரம் கொடுத்தார்.

இந்த தரிசனத்தைத் தொடர்ந்து அவர் குருவாயூரில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மைதானத்தில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். குருவாயூரில் நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மாலதீவுக்கும், இலங்கைக்கும் 2 நாள் சுற்றுப் பயணமாக மோடி செல்லவுள்ளார்.

மோடி கேரளா சென்றுள்ள அதே வேளையில், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் தனது தொகுதியான வயநாட்டுக்குச் சென்றுள்ளார். அங்குத் தன்னை வெற்றி பெறச் செய்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார்.

**

மேலும் படிக்க

**

**

[திமுக எம்.பி, எம்.எல்.ஏ.வுக்காக காத்திருந்த முதல்வர்!](https://minnambalam.com/k/2019/06/07/70)

**

**

[திமுக எம்பிக்கள் ஜாதகம்: அமித் ஷா உத்தரவு!](https://minnambalam.com/k/2019/06/08/23)

**

**

[வாட்ஸ் அப்பில் கேள்வி: ஆள்வைத்து அடித்த அமமுக மா.செ!](https://minnambalam.com/k/2019/06/08/15)

**

**

[டிஜிட்டல் திண்ணை: தமிழர்களைக் கவர குவியும் சாமியார்கள்!](https://minnambalam.com/k/2019/06/07/83)

**

**

[ராஜ்நாத் சிங் – அமித் ஷா அதிகார மோதல்: பணிந்த மோடி](https://minnambalam.com/k/2019/06/07/31)

**

�,”

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share