tஉள்நாட்டில் உற்பத்தி: அரசுக்குச் சேமிப்பு!

Published On:

| By Balaji

�மொபைல்போன்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ததால் ரூ.3 லட்சம் கோடி வரையில் இந்திய அரசு சேமித்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய செல்லுலார் மற்றும் மின்னணு சாதனங்கள் கூட்டமைப்பு சார்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கடந்த நான்கு ஆண்டுகளில், *மேக் இன் இந்தியா* திட்டத்தின் கீழ் உள்நாட்டில் மொபைல்போன்கள் தயாரிக்கப்பட்டதால் இந்திய அரசுக்கு ரூ.3 லட்சம் கோடி மிச்சமாகியுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2017-18ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் இவ்வாறாக 22.5 கோடி மொபைல்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை மொத்த மொபைல் சந்தைத் தேவையில் 80 சதவிகிதத்தைப் பூர்த்தி செய்துள்ளன. உள்நாட்டு உற்பத்தி வாயிலாக இந்தியாவின் அந்நியச் செலாவணியில் ரூ.60,000 கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 120 புதிய மொபைல் தயாரிப்பு ஆலைகள் அமைக்கப்பட்டு அதன்மூலம் 4.5 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் சுமார் 290 மொபைல் உற்பத்தி ஆலைகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் ரூ.1,65,000 கோடி மதிப்பிலான மொபைல்போன்கள் உருவாக்கப்படும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. மொபைல்போன்களை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய மேக் இன் இந்தியா திட்டம் வழிவகை செய்கிறது. இதன் மூலம் அந்நிய முதலீடுகள் குவிந்து வருவதோடு, இந்தியர்களுக்கு அதிகளவிலான வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share