tஉச்ச நீதிமன்ற நீதிபதியாக கோகாய் பரிந்துரை!

Published On:

| By Balaji

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாயை நியமிக்கப் பரிந்துரை செய்துள்ளார் தற்போதையை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா.

உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பதவியானது பணி மூப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது. பொறுப்பில் உள்ள தலைமை நீதிபதி, ஓய்வு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பாக, அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதைப் பரிந்துரை செய்ய வேண்டும். வரும் அக்டோபர் 2ஆம் தேதியன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஓய்வு பெறுகிறார். கடந்த வாரம், அடுத்த தலைமை நீதிபதி யார் என்பதைப் பரிந்துரைக்கும்படி தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடிதம் அனுப்பியது. தனக்கு அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதியான ரஞ்சன் கோகாய் பெயரைப் புதிய தலைமை நீதிபதி பொறுப்புக்கு, இன்று (செப்டம்பர் 4) முறைப்படி பரிந்துரை செய்துள்ளார் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா. இது தொடர்பாக, மத்திய சட்ட ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை அவர் அனுப்பியுள்ளார்.

இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால், அக்டோபர் 3ஆம் தேதியன்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய்க்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். தீபக் மிஸ்ரா ஓய்வு பெறும் அக்டோபர் 2ஆம் தேதியன்று தேசிய விடுமுறை என்பதால், அக்டோபர் 1ஆம் தேதிதான் அவருடைய கடைசி பணி நாளாகும்.�,

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share