வெளி மாநிலங்களுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
**தொடர்கதையாகும் தமிழக மாணவர்களின் தற்கொலைகள்**
2016, ஜூலை 10: எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த சரவணன் விஷ ஊசி செலுத்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது.
2018, ஜனவரி 17: டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்துவந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு மர்மமான முறையில் உயிரிழந்தார்.
2018, ஜனவரி 5: குஜராத்தின் அகமதாபாத் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த மாரி ராஜ் என்ற மாணவர் சாதி அடிப்படையில் பேராசிரியர்கள் அளித்த தொல்லை காரணமாகத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார்.
2018, பிப்ரவரி 26: முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான பி.ஜி.ஐ.எம்.இ.ஆர் கல்லூரியில் முதலாமாண்டு படித்துவந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவரான கிருஷ்ண பிரசாத், தற்கொலை செய்துகொண்டார்.
தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்குச் சென்று பயிலும் தமிழக மாணவர்களின் மரணங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், நேற்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம் ஏ ஆங்கிலம் இறுதியாண்டு பயின்ற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரிஷி ஜோஸ்வா தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று டெல்லி போலீசார் தகவல் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் வெளிமாநிலங்களுக்குப் படிக்க செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லிக்குக் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்கள் ஏதாவது ஒருவகையில் துன்புறுத்தப்பட்டு மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்டு, தங்கள் இன்னுயிரை மாய்த்து கொள்வது தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. உயர் கல்வி பயில தங்கள் பிள்ளைகளை அனுப்பி விட்டு அவர்களின் பாதுகாப்பு குறித்துப் பெற்றோர் தினம்தோறும் பயத்தில் மன நிம்மதி இழந்து நிற்க வேண்டிய நிலை உள்ளது.
வெளி மாநிலங்களில் கல்வி பயிலச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை அமைப்பு ரீதியாக உறுதி செய்வதற்குத் தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பல முறை வலியுறுத்தியும் இந்த அரசு அலட்சியமாக இருக்கிறது.
இதன் விளைவாக நாட்டின் இளைஞர்களாகிய மிகப்பெரிய செல்வங்கள் ஒவ்வொருவராக நாம் இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாகத் தமிழக மாணவர்களால் டெல்லி மாணவர்களின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்ற விஷம பிரச்சாரம் நடை பெறுகின்ற நேரத்தில் தமிழக மாணவர்களின் பாதுகாப்பில் தமிழக அரசு அதிக கவனம் செலுத்திட வேண்டியது மிக முக்கியமாகும்.
ஆகவே டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயில செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பினை உறுதி செய்திட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
.
.
**
மேலும் படிக்க
**
.
**
[விமர்சனம்: மிஸ்டர் லோக்கல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/7)
**
.
**
[டிஜிட்டல் திண்ணை: கெஞ்சல், மிரட்டல்- கமல் வெளியிடாத ரகசியத் தகவல்!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/84)
**
.
**
[ஸ்பெயின் ரசிகர்களைக் கவர்ந்த தனுஷ்](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/53)
**
.
**
[தினகரனுக்கு எடப்பாடி சொன்ன செய்தி!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/17/27)
**
.
**
[மோடி காய்ச்சல்: சந்திரபாபு நாயுடு பரபரப்பு!](https://wordpress-1398824-5190649.cloudwaysapps.com/k/2019/05/18/52)
**
.
.
�,”